Breaking News

ரவிக்கு மீண்டும் அமைச்சர் பதவி.!

பிணை முறி விவகாரம் தொட ர்பான குற்றச்சாட்டுக்களை அடுத்து அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ரவி கருணாநாயக்கவுக்கு இந்த வாரம் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப் படவுள்ளனர். 

ஐக்கிய தேசியக்கட்சியின் தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ள இந்த யோச னைக்கு ஜனாதிபதி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ரவி கருணாநாயக்க சம்ப ந்தமாக குற்றச்சாட்டுக்கள் இருந்தால், இரண்டு மாதங்களுக்குள் அவற்றை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறி வித்திருந்த போதும் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் அந்த காலக்கெடு முடி வடைகிறது. 

ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்ச ரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை வழங்காமல் தவிர்க்கும் அளவுக்கு எக் காரணங்களும் இல்லை என்பதே சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.