"ஆட்சி மாறினாலும் ஆணைக்குழுவின் நோக்கம் நிறைவேறும்"
வடக்கில் காணாமல்போனவர்களை மாத்திரம் கண்டுபிடிப்பது நோக்கமல்ல தெற்கிலும் காணாமல் போனவர்களை கண்டு பிடித்து உறவுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே காணாமல்போனோர் அலுவலகத்தின் பிர தான நோக்கமென காணாமல்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் கணபதிபிள்ளை வேந்தன் தெரிவித்துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்,
ஆட்சி மாற்றத்தின் பின்னர் யுத்தத் தில் காணாமல் போனோரை கண்டு பிடிக்க சுயாதீன ஆணைக்குழு நிறு வப்பட்டது. 2015 ஆம் ஆண்டுக்கு முற் பட்ட காலத்திலும் காணாமல் போனோரை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
எனினும் கடந்த காலங்களில் காணாமல் போனோர் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் பரிந்துரை செய்த தகவல்கள் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு அதிருப்தியினை ஏற்படுத்துவதாகவே காணப்பட்டுள்ளது.
அது அமைப்புக்களின் தவறல்ல ஏனென்றால் இதுவரை காலமும் யுத்தத்தில் காணாமல் போனோரின் எண்ணிக்கை நிச்சயமாக தெரிவிக்கப்படவில்லை.
காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பில் வடக்கில் மாத்திரம் எதிர்ப்புக் கள் எழவில்லை தெற்கிலும் தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் எழுந்தவண்ணமே உள்ளது.
அலுவலகம் அமைக்கப்பட்டு இதுவரை காலமும் காணாமல் போயுள்ளோர் தொடர்பில் உறுதியான தவகல்கள் வழங்க முடியாதமைக்கு பல காரணங்கள் உண்டு.
காணாமல்போனோர் அலுவலகத்தின் பணிகளை சிறப்புற முன்னெடு க்க அரசாங்கத்திற்கு குறுகிய காலகட்டமே உள்ளது.
இக் கால கட்டத்திற்குள் நாட்டின் அனைத்து தரப்பினரின் நம்பிக்கையினை பெறும் நோக்கில் காணாமல் போனோர் அலுவலகம் செயற்படும்.
மேலும் ஆட்சி மாற்றம் இடம்பெற்றாலும் ஆணைக்குழுவின் நோக்கம் நிறைவேறும் ஏனென்றால் அலுவலகம் அரசியல் விடயங்களை மையப்படுத்தி ஒரு போதும் செயற்படாதெனத் தெரிவித்துள்ளனா்.