Breaking News

சலுகைகள் மூலம் ஏமாற்றி விட முடியாது - சி.வி.

வடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியுள்ளார். 

தமிழ் மக்கள் போரினால் வலுவிழந் துள்ளார்கள். படித்தவர்கள், பல் தொழில் விற்பன்னர்கள் எனப் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார் கள். வலுவிழந்தவர்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசினால் அவர்கள் அவற்றைக் கவ்விக் கொண்டு தமது உரித்து பற்றி, சுதந்திரம் பற்றி, தனித்துவம் பற்றி பேச­மாட்­டார்கள் என அவர் எண்­ணு­கின்றார் போன்று கரு­து­கின்றேன் என வடக்கு முதல்வர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்துள்ளாா். 

எமது வட­மா­காண சபை ஒக்­டோ­பரில் கலைக்­கப்­பட்­டதும் வட­மா­காண ஆளு நர் அடுத்த தேர்தல் வரமுன் அவர் எதனைச் செய்ய வேண்டும் என்­பது தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என்று அறி­கின்றேன். 

கிளி­நொச்­சியில் பௌத்த விகா­ரை­யொன்றைத் திறந்து வைப்­பது அதில் முக்­கி­ய­மாக உள்­ளது. கிளி­நொச்­சியை பௌத்­தர்கள் வாழும் இட­மாக மாற்ற நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளாா். 

இலங்கை சட்ட கல்­லூரி சட்ட மாண­வர்­களின் இந்து மகா சபையின் ஏற்­பாட் டில் வெள்­ள­வத்தை தமிழ் சங்­கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடை­பெற்ற கலை விழா மற்றும் நக்­கீரம் நூல் வெளி­யீட்டு விழாவில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே விக்­கி­னேஸ்­வரன் மேற்­கண்­ட­வாறு தெரிவித்துள் ளாா்.

வடக்கு முதல்வர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், எதிர்வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் நிற்க ஆவல் கொண்­டி­ருக்கும் ஒருவர் பேசி­யதைப் பத்­தி­ரி­கையில் பார்த்தேன். வட­கி­ழக்கு மக்கள் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யையே கேட்­கின்­றார்கள் என்­றி­ருந்தார்.

அவரின் எண்ணம் தமிழ் மக்கள் போரின் பின்னர் வலு இழந்­துள்­ளார்கள். படித்­த­வர்கள், பல்­தொழில் விற்­பன்­னர்கள் எனப் பலர் வெளி­நா­டு­க­ளுக்குச் சென்று விட்­டார்கள். வலு இழந்­த­வர்­க­ளுக்கு எலும்புத் துண்­டு­களை வீசினால் அவர் கள் அவற்றைக் கவ்விக் கொண்டு தமது உரித்து பற்றி சுதந்­திரம் பற்றி, தனித்­துவம் பற்றி பேச­மாட்­டார்கள் என்­ப­தாகும்.

இத் தொடர் குழப்­ப­நி­லையை எமக்­கி­டையே ஏற்­ப­டுத்­து­வ­திலும் சிங்­கள அர­சியல்த் தலை­வர்கள் வெற்றி கண்­டுள்­ளார்கள். தனிப்­பட்ட சலு­கை­களை அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு நல்கி அவர்­களைத் தம்பால் ஈர்க்க எத்­த­னித்து இது­வ­ரையில் வெற்­றியும் கண்­டுள்­ளார்கள் என்றே கூற வேண்­டி­யுள்­ளது.

இத­னால் தான் தமிழ்ப் பேசும் மக்கள் எங்­கி­ருந்­தாலும் தமது பகை­மை­யு­ணர்­வு­களை மூட்டை கட்­டி­விட்டு ஒருங்­கி­ணைந்து ஒற்­று­மை­யாக ஒரு பொது­வான அர­சியல் தீர்வைக் கோர வேண்டுமெனக் கருத்து வெளி­யிட்டு வரு­கின்றோம்.

அப் பொது­வான கோரிக்கை தான் சமஷ்டி அர­சாங்கம் என்­பது. சமஷ்டி என்­ற­வுடன் அது பிரி­வினை என்று சிங்­கள மக்கள் மனதில் பயத்­தையும் பீதி­யையும் நிலை நாட்­டி­யுள்­ளார்கள் சிங்­கள அர­சியல் தலை­வர்கள். சமஷ்டி பற்­றிய புரிந்­து­ணர்வு சிங்­களப் பொது மக்­களைச் சென்­ற­டை­யா­மையே சமஷ்­டியை தொடர் ந்து வரும் பெரும்­பான்மை அர­சாங்­கங்கள் எதிர்ப்­பதன் காரணம்.

தாம் சமஷ்டி பற்­றிய உண்­மையை மக்­க­ளுக்கு உணர்த்­தினால் தம்மைத் துரோ­கிகள் என்று அவர்கள் முடிவு செய்­து­வி­டு­வார்­களோ என்று கவ­லைப்­ப­டு­கின்­றார்கள் சிங்­கள அர­சியல் தலை­வர்கள். சமஷ்டி பற்­றிய பொய் கூறிய சிங்­கள அர­சியல் தலை­வர்கள் அது பற்­றிய உண்­மையைக் கூறத் தயங்­கு­கின்­றார்கள். அதற்­காகத் தான் ஒன்­பது மாகா­ணங்­க­ளுக்கும் சமஷ்டி கேளுங்கள் என்று சிங்­களத் தலை­வர்­க­ளிடம் கோரி வரு­கின்றேன்.

சில காலத்­திற்கு முன்னர் நடந்த ஒன்­பது மாகாண முத­ல­மைச்­சர்கள் மா­நாட்டில் வட­மத்­திய மாகா­ணத்தின் அப்­போ­தைய முத­ல­மைச்சர் பின்­வ­ரு­மாறு ஜனா­தி­பதி சிறி­சேனா முன் எடுத்­து­ரைத்தார். “எமக்கு நூறு­வீதம் அதி­கா ரப் பகிர்வு வேண்டும். ஆனால் சமஷ்டி வேண்டாம்” என்று அவர் கூறினார்.

முழு­மை­யான அதி­காரப் பகிர்வை ஒரு சமஷ்டி அர­சியல் யாப்பின் கீழ்த் தான் நடை­மு­றைப்­ப­டுத்­தலாம் என்­பது அவ­ருக்கு தெரி­யாமல் இருந்­தி­ருக்­கலாம். சமஷ்டி என்ற சொல் தான் அவ­ருக்கு வேண்­டா­தி­ருந்­தது.

சமஷ்­டியின் உள்­ள­டக்­கமும் உள்­நோக்­கமும் அவ­ருக்கு எந்­த­வித இடர்­பாட்­டி­னையும் கொடுக்­க­வில்லை. சமஷ்டி பற்றி தமி­ழர்­க­ளி­டையே இரு வித­மான எதிர்ப்­பா­ளர்கள் இருக்­கின்­றார்கள். ஒரு ­சாரார் சமஷ்டி கிடைக்­காது; ஆகவே வேறே­தேனும் பொறி­மு­றையை நாங்கள் மாற்­றாக உரு­வாக்க முனைவோம் என்­கின்­றார்கள்.

இன்­னொ­ரு ­சாரார் ஒற்­றை­யாட்சி முறையே சிறந்­தது என்­கின்­றார்கள். இரண் டாம் பிரி­வினுள் பணம் படைத்த தமிழ் வர்த்­த­கர்கள் பலர் இடம் பெறு­கின்­றார்கள். சமூ­கத்தின் உயர் மட்டச் சிங்­களத், தமிழ், முஸ்லிம் தலை­வர்­க­ளு டன் தாம் மிக நெருக்­க­மாகப் பழ­கி­ வ­ரு­வதால் அவர்­களைக் கொண்டு நாடு பூரா­கவும் எத­னையம் தாம் செய்­விக்­கலாம் என்ற ஒரு இறு­மாப்பு அவர்­க­ளி­டையே காணப்­ப­டு­வதை நான் அவ­தா­னித்­துள்ளேன்.

முக்­கி­ய­மாகச் சில முறை­யற்ற செயற்றிட்­டங்­களை இவ்­வா­றா­ன­வர்கள் மாகா­ணங்­க­ளுக்குக் கொண்டு வரும் போது மாகாண அர­சாங்கம் தம் மக்கள் நலம் சார்ந்து எதிர்ப்புத் தெரி­வித்தால் “பார்த்­தீர்­களா?

இப் பல்­லில்­லாத 13ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழேயே இவ்­வ­ளவு பந்தா காட்­டு­கின்­றார்கள் என்றால் உண்­மை­யான சமஷ்டி கிடைத்தால் என்­ன­வெல் லாம் இவர்கள் சொல்­வார்கள்?”

என்று கூறி ஒற்­றை­யாட்சி முறையே சிறந்­தது என்­கின்­றார்கள். அதி­க­மாக இந்தப் பிரிவைச் சேர்ந்­த­வர்கள் கொழும்பில் வாழும் பணம் படைத்த தமிழ் வர்த்­த­கர்­க­ளே­யாவர். சமஷ்டி கிடைக்­காது என்­பதால் சமஷ்­டியை வெறுப்­பது எமது கையா­லா­காத தனத்தைக் காட்­டு­கின்­றது.

சமஷ்டி என்ற சொல் சிங்­கள மக்­க­ளி­டையே வெறுப்பு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பது உண்­மை­யே­யாகும். ஆனால் அந்த வெறுப்பு சமஷ்­டிக்கு எதி­ரா­ன­தல்ல. சமஷ்­டியை ஆத­ரித்­த­வர்­க­ளுக்கு எதி­ரா­னது. தமி­ழர்­களை வெறுத்­த­வர்கள் அவர்கள். தமி­ழர்கள் சமஷ்டி கேட்­டதால் சமஷ்­டி­யையும் வெறுத்­தார்கள். சமஷ்டி என்­பது ஒரு நாகரிக நவிலல் அல்ல.

அது அத்­தி­யா­வ­சி­ய­மா­னது என்­பதை இங்கு கூற விரும்­பு­கின்றேன். வடக்கு கிழக்கு மாகாண பெரும்­பான்மை மக்கள் நாட்டின் பெரும்­பான்மை மக்­க­ளி­ட­மி­ருந்து மொழியால், கலா­சா­ரத்தால், மதத்தால், வாழ்க்கை முறையால் வேறு­பட்­ட­வர்கள். அவர்கள் சர்­வ­தேச சட்­டத்தின் ஏற்­பா­டு­க­ளின்­படி ஒரு மனி­தக்­கு­ழுமம் ஆவார்கள்.

அவர்­க­ளுக்­கென்று ஒரு நீண்­ட­ச­ரித்­திரம் உண்டு. வேடர்­களுட் பட இவ்­விரு மாகாண மக்­க­ளுமே இலங்­கையின் பூர்­வீகக் குடிகள். சிங்­கள மொழி கி.பி.6ஆம் அல்­லது 7ஆம் நூற்­றாண்டில் வழக்­குக்கு வரமுன் சிங்­களம் பேசியோர் இருக்­க­வில்லை.

ஆகவே வெள்­ளை­யர்கள் நாட்டை 1833ஆம் ஆண்டில் நிர்­வாக ரீதி­யாக ஒன்­றி­ணைக்கும் போது இரு­த­ரப்­பட்ட மக்­களை அல்­லது கண்­டிய சிங்­க­ள­வ­ரையும் தனி­யாகச் சேர்த்தால் மூன்று வித­மான மக்கள் குழு­மங்­களை இணைத்­தார்கள்.

 இன்று பெரும்­பான்­மையோர் அர­சாங்­கங்கள் கண்­டிய சிங்­க­ள­வர்­க­ளுக்கும் சம அந்­தஸ்து அளித்து சிங்­கள மக்­களை ஒன்­றி­ணைத்­துள்­ளார்கள். அடுத்து வட­கி­ழக்கைத் தம் வச­மாக்க பெற்றுக் கொள்ள நட­வ­டிக்­கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. இந்த நிலையில் எமது ஒரேயொரு மார்க்கம் என்ன?

சமஷ்டியைக் கோரிப் பெறுவது தான் மார்க்கம். சமஷ்டி எம்மை நாமே ஆள வழிவகுக்கும். மத்தியின் உள்ளீடல்கள் குறையும். எமது தனித்துவம் ஓரள விற்குப் பாதுகாக்கப்படும். இதனால் தான் சமஷ்டி வேண்டப்படுகின்றது.

ஒற்றையாட்சி முறை எம்மை சிங்கள ஆதிக்கத்தினுள் ஆழ்த்தி விடும். ஆதிக் கத்தினுள் அமிழ்ந்தாலும் பரவாயில்லை, ஆனால் மொழி, மதம், கலாசாரம் போன்ற பலவற்றாலும் எம்மைத் தம்மோடு இணையச் செய்துவிடுவார்கள்.

வெறும் பொருளாதார நன்மைகளைப் பெற்று எமது தனித்துவத்தை நாம் இழக்க வேண்டுமா என்பதை நீங்களே நிர்ணயிக்க வேண்டும். அன்றைய சிங் கள மக்கள் தலைவர்களின் குறிக்கோள்களையே இன்றைய சிங்கள மக்கள் தலைவர்களும் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

ஆனால் நாம் விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளோம். விட்டுக் கொடுத்தால் நாம் பௌத்த சிங்களவராகவோ பௌத்த தமிழர்களாகவோ மாறிவிட வாய்ப்பி ருக்கின்றது. ஏற்கனவே எமது வடமாகாண சபை ஒக்டோபரில் கலைக்கப் பட்டதும் வடமாகாண ஆளுநர் அடுத்த தேர்தல் வரமுன் அவர் எதனைச் செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

என்று அறிகின்றேன். அவர்கள் செய்யவிருப்பதில் ஒன்று கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்றைத் திறந்து வைப்பதாகும். கிளிநொச்சியை பௌத் தர்கள் வாழும் இடமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

பௌத்தர்கள் என்றால் சிங்களவரே என்ற தப்பபிப்பிராயம் பரப்பப்பட்டு வரு கின்றது. ஆகவே இன்றைய நிலையில் நாம் உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த வேண்டும். சிங்கள மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும்.

சமஷ்டி ஒன்றே எம்மை ஒருமித்து இந்த நாட்டில் வாழ வைக்கும் என்ற உண்மையை சிங்கள மக்களுக்கு உணர்த்த வேண்டும். சமஷ்டி கிடைத்தால் அடுத்த நாளே வடக்கும் கிழக்கும் ஒருங்கிணைந்து இதர மாகாணங்களுடன் சேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையைப் பரப்ப வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.