காணாமல் ஆக்கப்பட்ட உறவைத் தேடி போராடிய யுவதி உயிரிழப்பு- வவுனியா.!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டத்தில் போராடி வந்த யுவதி ஒருவர் வவுனியாவில் நேற்றைய தினம் மாலை உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 500 நாட்களையும் தாண்டி சுழற்சி முறையிலான போராட் டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப் போராட்டத்தில் தனது சகோதரனை காண வில்லையெனத் தெரிவித்து போராட்ட களத்தில் சுழற்சி முறையில் போராடி வந்த இராசநாயகம் நிலா (வயது 24) என்ற யுவதி தனது உயிரை மாய்த்துள் ளாா்.
தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததனால் மன அழுத்தம் மற்றும் உடல் நலக்குறைவு என்பவற்றால் பாதிப்படைந்த இந்நிலையில் தனது சகோ தரனுக்கு என்ன நடந்தது எனத் தேடிய யுவதி உயிரிழந்துள்ளாா் என்பது குறிப் பிடத்தக்க விடயமாகும்.








