Breaking News

உண்மையைக் கூறுவதால் நாங்கள் பயங்கரவாதிகள் ஆகிவிடமாட்டோம் - சி.வி.

தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதி பலிக்கின்றது. எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேசமுன் வாருங்கள் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரி வித்துள்ளார்.

பிர­பா­கரன் காலத்தில் எம் மக்கள் பாது­காப்­பாக இருந்­தார்கள் என்ற உண்­மை யைக் கூறு­வதால் நாங்கள் எவரும் பயங்­க­ர­வா­திகள் ஆகி­வி­ட­மாட்டோம். அந்த நாள் இன்­று­வந்­தி­டாதோ என்று விஜ­ய­கலா கூறு­வதால் அவர் தீவி­ர­வாதி ஆகி­வி­ட­மு­டி­யாது. 

புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்­தத்தில் ஏற்­பட்­ட­ பா­திப்­புக்­க­ளை­விட) பொது­வாகப் பாது­காப்­பாக இருந்­தார்கள் என்­பது உல­க­றிந்த உண்மை. ஆகவே விஜ­ய­கலா தனது கட­மை­களைத் தொடர்ந்து பணி­யாற்ற அவரின் கட்சி இட­ம­ளிக்­க ­வேண்டும். 

தேசியக் கட்­சியில் இடம்­பெ­று­வதால் தமி­ழச்சி என்ற அந்­தஸ்தை இழந்­த­வ­ரா கக் கணிக்­கக்­கூ­டாது. விஜ­ய­கலா சுதந்­தி­ரமும் தனித்­து­வமும் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என  சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.