Breaking News

"வருட முடிவில் அர­சாங்கம் வீட்­டுக்குச் செல்லலாம்" - ரோஹித அபே­கு­ண­வர்­தன.!

நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் முறை­யற்ற செயற்பாட்டினால் நாட்டை முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யாது. ஆகவே இவ்­ வ­ருடம் முடிவிற் குள் அர­சாங்கம் வீட்­டுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாமெனக் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹித அபே­கு­ண­வர்­தன தெரி­வித்­துள்ளார். 

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­ற போது கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­ல் இவ்வாறு தெரிவித் துள்ளாா். 

 மேலும் விவரிக்கையில்.....,


 மக்கள் வாழ்க்­கையைக் கொண்டு நடத்த முடி­யாத நிலைக்கு நல்­லாட்சி அர­சாங்கம் தள்­ளி­யுள்­ளது. நாட்டில் தற்­போது சகல துறை­க­ளிலும் பணிப் பகிஷ்­க­ரிப்பு இடம்­பெ­று­கி­றது. படைப்­பி­ரிவு மற்றும் பொலி­ஸாரைத் தவிர ஏனைய சகல தரப்­பி­னரும் பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டுள்­ளனர். 

நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு மக்கள் கடந்த பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி நல்ல தீர்ப்­பை வழங்­கி­யி­ருந்­தனர். அத்­தேர்தல் மூலம் அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆணை இல்­லாது போயுள்­ளது. மேலும், பிர­தமர் பதவி கோரிய கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் தற்­போது ஏன் உத்­தி­யோ­க­பூர்வ எதிர்க்­கட்சித் தலைமைப் பதவி கோர வேண்டும் என அமைச்சர் மஹிந்த அம­ர­வீர கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

எனினும், அவ­ரைப் ­போன்று, கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிப்­ப­வர்­க­ளு க்கு பதவி மோகம் இல்லை. பதவி மோகம் இருக்­கு­மாயின் நாம் அர­சாங்­கத் தில் இணைந்து அமைச்சுப் பத­வி­களைப் பெற்­றி­ருப்போம். 

ஆகவே எதிர்க்­கட்சித் தலைமைப் பதவி கோரு­வது பத­விக்­காக அல்ல. நாட்­டுக்கு எதி­ரான தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளும் அர­சாங்­கத்­துக்கு பாரா­ளு­மன்றில் உரிய வகையில் எதிர்ப்­பைத் தெரி­விப்­ப­தற்­காகும். மேலும் நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் முறை­யற்ற நட­வ­டிக்­கை­யால் தொடர்ந்தும் நாட்டை முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யாது.

ஆகவே இவ்­வ­ருடம் நிறை­வ­டை­வ­தற்கு முன் அர­சாங்கம் வீட்­டுக்குச் செல்ல வேண்டி வரும். அத்­துடன் கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்றில் சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­டு­வது குறித்து, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை யில் நாளை (இன்று) நடை­பெறும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

 மேலும் பாரா­ளு­மன்றின் முழு அள­வி­லான பொறுப்­புக்­கூறல் சபா­நா­ய­க­ருக்கு உள்­ளது. எனவே எழு­பது உறுப்­பி­னர்­க­ளைக்­கொண்ட கூட்டு எதிர்க் ­கட்­சிக்கு எதிர்க்­ கட்சித் தலைமை வழங்­கப்­பட வேண்டுமென சபா­நா­ய­கரின் உள் ­மனம் பேசுகின்றது. 

மேலும் அதற்கு அடுத்த சக்தி இட­ம­ளிப்­ப­தில்லை. ஆகவே ஆட்சி மாற்றம் ஏற்­படும் வரையில் கூட்டு எதிர்க் ­கட்­சிக்கு எதிர்க்­ கட்சித் தலை­மையை வழங்­கா­தி­ருப்­ப­தற்கே எதிர்­பார்க்­கின்­றனர். ஏனெனில் அர­சாங்­கமும் உத்­தி­யோ­க­பூர்வ எதிர்க் ­கட்­சியும் இணைந்தே ஆட்­சியை முன்­னெ­டுக்கவுள்ளனா். 

கூட்டு எதிர்க் ­கட்­சி­யி­லுள்­ள­வர்கள் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கின்ற வேளையில் எமது பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மைக்கு சவால் ஏற்­ப­டு­மா யின் அதனை எதிர்­கொள்ளத் தயா­ராக உள்ளோம். அது குறித்து நீதி­மன்றம் செல்­வ­தற்கும் தயாராகியுள்ளோம். 

ஏனெனில் நாம் தேசி­யப்­பட்­டியல் மூலம் பாரா­ளு­மன்­றுக்குத் தெரிவாக வில்லை. மக்களின் ஆணை மூலமே தெரிவாகியுள்ளோம். எனவே அதனை முன்னிறுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வோமெனத் தெரிவித் துள்ளாா்.