Breaking News

விக்னேஸ்வரன் மீது குற்றச்சாட்டு - சம்பிக்க ரணவக்க.!

தமிழ்மக்களை தூண்டுவதை மாத்திரமே விக்னேஸ்வரனால் செய்ய முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

விக்னேஸ்வரன் குறிப்பிடத்தக்க பாரிய அபிவிருத்தி திட்டமொன்றை யும் முன்னெடுக்கவில்லை அவரால் அப்பாவி தமிழ் மக்களை தூண்டிவிட மாத்திரமே முடியுமென அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளாா். 

பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தியாகங்களிற்காகவே விக்னேஸ்வர னால் பதவி வகிக்க முடிவதாகத் தெரிவித்துள்ளதுடன்  ஐந்து வருடங்களாக விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவி வகிக்கின்ற போதிலும் அவர் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவில்லையென குற்றம் சுமத்தி யுள்ளாா்.