ஆடின ஆட்டத்துக்கு அனுபவியுங்கள்- முன்னாள் பெண் போராளியை திட்டித் தீர்த்த வைத்தியர்
'போராளிகள் முன்னர் ஆடின ஆட்டத்துக்கு அனுபவியுங்கள்' என்று காலை இழந்த முன்னாள் பெண் போராளியை திட்டிவிட்டு, மயக்க மருந்து கொடுக் காமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார் ஒரு தமிழ் வைத்தியர்.
இச் சம்பவம் வவுனியாவில் நடந்துள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள போராளி கள் உட்பட தமிழ் உறவுகளின் அவலங் களை புலம்பெயர் உறவுகளுக்கு சுமந்து வருகின்ற உறவுப் பாலம் நிகழ்ச்சியில் மனதை உறைய வைக்கும் இச் சம்பவம் பதிவாகியுள்ளது.