Breaking News

யாழில் இப்படியொரு நிலையா? கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிக ரிக்குமென யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் என பேராசிரி யர் ராமு.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டிருந்த அவர் இன்று நாடு திரும்பிய நிலையில் இவ்வாறு தெரி வித்துள்ளாா்.

தொடர்ந்தும் பேசிய அவர், “வடக்கு கிழக்கில் பாடசாலைகள் இயங்குகின் றன. எனினும், மாணவர்களை இல க்கு வைத்து அங்கு போதைப்பொருள் விநி யோகிக்கப்படுகின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுமென யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். தமிழ் மக்களின் மிகப்பெரிய அடையா ளமே கல்விதான். அந்த கல்வியை அழிக்கும் நடவடிக்கைகள் நடைபெறுகின் றன.

மேலும், வடக்கில் ஒருலட்சத்திற்கும் அதிகமான கணவனை இழந்த பெண்க ளும், கிழக்கில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான கணவனை இழந்த பெண்களும் உள்ளனர்.

மேலும் பாலியல் தொல்லைகள், குடும்ப வறுமைகள், கடன் தொல்லைகள் என்பன வடக்கு கிழக்கில் நிறைந்து கிடக்கின்றன. மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களுக்கு கடன் கொடுத்து, அவர்களை துன்புறுத்த ஒரு கொள்ளையா் கூட்டமே இயங்கி வருவதனால் பெண்கள் தற்கொலை செய் வது அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளாா்.