Breaking News

“அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்”

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிபந் தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் விடுதலை வேண்டிய நடைபயணம் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகியுள் ளது. 

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந் துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றி லிருந்து யாழ். பல்கலைக்கழக மாண வர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ண மீனன் தலைமையில் இந்த நடை பய ணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்டுள்ள இந்த நடை பவனி கிளிநொச்சி, வவுனியா ஊடாக அனுராதபுரம் சிறைச்சாலை வரை சென்று, அங்கு கைதிக ளின் விடுதலையை வலியுறுத்தி கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளது.