Breaking News

தாழை மரத்தில் தூக்கில் தொங்கிய 13 வயது சிறுமி!: கொலையா? தற்கொலையா?

காலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாழை மரமொன் றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் நேற்று பிற் பகல் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமியே இவ் வாறு உயிரிழந்தவர் என தெரிவிக்கப் படுகிறது. குறித்த சிறுமி இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் காணா மல் போன நிலையில் இன்று சடல மாக மீட்கப்பட்டுள்ளாா்.

காணாமல் போனமை தொடர்பாக குறித்த சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தற் கொலையா அல்லது கொலையா என, காலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.