Breaking News

முப்படைகளின் பிரதானியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.!

பதினொரு இளைஞர்களை கடத்திக் காணாமலாக்கிய சம்பவத்திலான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிறிலங்காவின் முப்படைகளின் பிர தானி அட்மிரல் ரவீந்திர விஜய குண ரத்னவை கைது செய்வதில் தமக்கு அழுத்தங்கள் உள்ளதாக சி.ஐ.டி என அழைக்கப்படும் குற்றப் பிலனாய்வுப் பிரிவு பொலிஸார் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனா்.

இதனையடுத்து அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்னவை கைது செய்து நீதி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு ரகசிய பொலிஸாருக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. 

சிறிலங்காவில் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் மைத்திரி-மஹிந்த அர சாங்கத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன வுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையிலேயே கொழும்பு கோட்டை நீதவானால் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறிலங்காவின் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ புதிய பிரதமராக பதவி ஏற்றதையடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் சிறி லங்கா அரச தலைவரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்திற்கும் அட்மிரல் ரவீந்திர வியஜ குணரத்னவே நியமனமாகியிருந்தாா்.

இவர் கடற்படையிலிருக்கும் தனக்கு விசுவாசமான அதிகாரிகள் தலைமை யிலான படைப்பிரிவொன்றை மைத்திரி பாதுகாப்புக்கு ஈடுபடுத்தியுள்ள நிலை யில் அவரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இளைஞர்களை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு விசா ரணைக்கு வந்தபோது கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஷாநாயக்க நவம்பர் 9ஆம் திகதிக்கு முன்னர் அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்னவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு  கட்டளையிட்டுள்ளாா்.

ஏற்கனவே இந்த வழக்கில் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத் துமாறு ரகசியப் பொலிஸாருக்கு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தபோதிலும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில்வைத்து 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் ஐந்து மாணவர்கள் உட்பட 11 இளைஞர்களை வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவங்க ளின் பிரதான சந்தேக நபராக தெரிவாகியுள்ள,

கடற்படை புலனாய்வுப்பிரிவின் அதிகாரி லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரய்ச்சி நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உதவியதாக முன் னாள் காற்படைத் தளபதியான அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்னமீது குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்னவை கைதுசெய்வதற்கு போதிய சாட்சிகள் கைவசம் இருக்கின்ற நிலையிலும் ஏன் அவரைக் கைதுசெய்யாமல் இருக் கின்றீர்கள் என்று கோட்டை நீதவான் மன்றில் முன்னிலையாகியிருந்த குற் றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் வினாவியுள்ளாா்.

இதற்கு பதிலளித்த குற்றப் புலனாய்வுத்திணைக்கள அதிகாரிகள் முப்படை களின் பிரதானியாக இருக்கும் அட்மிரலைக் கைது செய்வதில் தமக்கு  அழுத் தங்கள் இருப்பதாக நீதவானிடம் தெரிவித்துள்ளனா்.

இவ் விளக்கங்களை செவிமடுத்த நீதவான் ரங்க திஷா நாயக்க, இந்த வழக்கு விசாரணை மீண்டும் நவம்பர் 9ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால் அதற்கு முன்னர் அட்மிரல் ரவீந்திர விஜய குணவர்தனவை கைது செய்ய வேண்டுமென குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.