பாராளுமன்றத்தால் பதவியிலிருந்து விலக்கப்பட்டார் மஹிந்த ; அனைவரும் ஜனநாயக விரோதிகள் - சம்பந்தன்
பாராளுமன்றத்தின் பெரும்பான்மை தீர்மானத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அமைச்சரவையும் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளாா்.
எனவே பதவியில் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆகவே அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் இல் லையெனில் அவர்கள் ஜனநாயக விரோத வாதிகளாவர் என தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.
பாராளுமன்றம் இன்று பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் கூடி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதை யடுத்து பாராளுமன்றத்தை விட்டு வெளியேறும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள் ளாா்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதியால் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்சினை உருவானது. இவ்வாறு ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்பட்டவர் பாராளுமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டியது ஒரு ஜனநாயக கடமையாகும்.
ஆனால் அந்த கடமையை அவர் நிறைவேற்றத் தவறி விட்டார். அதற்கு மாறாக சக உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டு, பணம் வழங்கப்பட்டு உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டும் கூட மஹிந்தவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடிய வில்லை. அந்த காரணத்தின் நிமித்தம் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானத்தை கொண்டு வந்து 14 ஆம் திகதி நிறைவேற்றினர்.
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு மஹிந்த ராஜபக்ஷவின் மீது நம்பிக்கை இல்லையெனக் கையொப்பமிட்டு சபாநாயகரிடத்தில் கடிதம் மூலமாக ஒப்படைத்துள்ளனா்.
15 ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய போது மஹிந்த ராஜபக்ஷ ஒரு உரை நிகழத்தினார். அந்த உரை மீது பாராளுமன்றத்ததுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் மீது நம்பிக்கையில்லை எனவும் ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்ட நிறை வேற்றமாகும். ஒரு புதிய தீர்மானத்தை பாராளுமன்றத்தில் ஒன்றில் நேர் வழியினால் அல்லது எலக்ரோனிக் முறையினால் நிறைவேற்றப்பட வேண்டு மெனத் தீர்மானிக்கப்பட்டு இன்று பாராளுமன்றம் கூடியது.
அதனடிப்படையில் இன்று பாராளுமன்றம் கூடியபோது சாபாநயகர் வரும் போது அவரை சபைக்குள் நுழைய விடாமல் அவரது ஆசனத்தை சூழ மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆதரவு உறுப்பினர்கள் அவர் வருவதை தடுத்தார்கள்.
இருந்தபோதும் கூட பொலிஸ் பாதுகாப்புடன் சபைக்குள் தாமதமாக நுழைந்து அந்த தீர்மானத்தை மீண்டும் வாக்கெடுப்புக்கு விட்டு நிறைவேற்றியதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவை மீது நம்பிக்கை யில்லை என்றத் தீர்மானம் மூன்றாவது முறையாகவும் நிறைவேற்றப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே பாராளுமன்றத்தின் பெரும்பான்மை தீர்மானத்துக்கு அமைவாக அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். எனவே தற்போது அவர் பதவியில் நீடிப் பதற்கு எவ்வித உரிமையும் இல்லை.
அத்துடன் அமைச்சரவையில் உள்ளவர்களுக்கும் தொடர்ந்தும் அமைச்சர் களாக இருப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆகவே அவர்கள் உடனடி யாக பதவி விலக வேண்டும் இல்லையென அவர்கள் ஜனநாயக விரோத வாதிகளாவர்.
அந்த வகையில் பாராளுமன்றத்தில் பொரும்பான்மையில்லாத பிரதமரோ அமைச்சரவையோ ஒரு போதும் நாட்டில் அரசாங்கம் அமைத்து ஆட்சி புரிய முடியாது. அது சட்டத்திற்கும், அரசியல் சாசனத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமெனத் தெரிவித்துள்ளாா்.