நாடாளுமன்றம் நவம்பர் ஐந்தாம் திகதி கூட்டப்படுமா?.
மைத்ரி – மஹிந்த அணியினரின் மாறுபட்ட கருத்துக்களால் சிறிலங்கா நாடா ளுமன்றம் எதிர்வரும் ஐந்தாம் திகதி கூட்டப்படுமா என்பதில் சந்தேகம் எழுந் துள்ளது.
நவம்பர் ஐந்தாம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் முற்பகல் தெரிவித்துள்ளாா்.
எனினும் கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மஹிந்தவாதியான சுசில் பிறேமஜய்ந்த், நாடாளுமன்றம் ஐந்தாம் திகதி கூட்டப்படாதெனத் தெரி வித்துதுடன், முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று 16 ஆம் திகதியே கூட் டப்படுமென திடகாத்திரமாகத் தெரிவித்துள்ளாா்.
சிறிலங்காவின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதை அடு த்து ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு முடிவு காணும் நோக்கில் உடன டியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு உள்நாட்டு வெளிநாட்டு தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனா்.
இந் நிலையில் நேற்றைய தினம் பல்கலைக்கழக வரிவுரையாளர்கள் உட்பட தொழிசார் நிபுணர்களை சந்தித்து கலந்துரையாடிய புதிய பிரதமர் மஹிந்த ராஜபக், எதிர்வரும் ஐந்தாம் திகதி திட்டமிட்டதற்கமைவாக நாடாளுமன்றம் கூட்டப்படுமெனத் தெரிவித்துள்ளாா்.
இதனையே சபாநாயகரும் வலியுறுத்தி வந்திருந்தார் என்று மஹிந்த நேற் றைய சந்திப்பில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அதேவேளை ஐந்தாம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதால் தமக்கு எந்தவொரு நெருக்கடியும் ஏற் படப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக், ஏற்படுத்தப் பட்டுள்ள புதிய அரசாங்கம் எந்தவித இடையூறும் இன்றி தொடருமெனத் தெரி வித்துள்ளாா்.
எனினும் நேற்று மாலை கொழும்பில் மஹிந்த – மைத்ரி அரசாங்கத்தின் முக் கியஸ்தர்கள் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், ஐந்தாம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படாதெனத் தெரிவித்துள்ளனா்.
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஐந்தாம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானிக்கலாம் என்றே கூறியிருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளாா்.
எனினும் எதிர்வரும் ஐந்தாம் திகதி நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் நாட்டின் அணைத்து இடங்களிலும் இருந்து அழைத்து வந்து மஹிந்த – மைத்ரி அர சாங்கத்தை கவிழ்க்க மேற்கொள்ளும் சதித்திட்டங்களை முறிடிப்பதற்கான போராட்டமொன்றை நடத்தப்போவதாக சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள் ளாா்.