Breaking News

ஆளும் தரப்பு விடுத்த கோரிக்கைக்கு ரணில் தரப்பு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கான தெரிவுக் குழுவில் தமக்கு பெரும்பான்மை வழங்கப்பட வேண்டுமென ஆளும் தரப்பு விடுத்த கோரிக்கை க்கு ரணில் தலைமையிலான எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளனா்.

குழப்பங்களுக்கு மத்தியில் ஐந்து நிமிடங்கள் வரையே இன்றைய நாடா ளுமன்ற அமர்வுகள் நடைபெற்றது டன், கட்சித் தலைவர்களின் கூட்டத் தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நாடாளுமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலை மையில் பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமானது. சபை அமர்வு ஆரம்பமா னதை தொடர்ந்து, கருத்து வெளியிட்ட பிரதி சபாநாயகர், எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாகத்  தெரிவித்துள்ளாா்.

இதன்போது குறுக்கிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, கடந்த 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடாளுமன் றத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.

இச் சம்பவங்களால் அரச சொத்துக்கள் அழிவடைந்துள்ளதாக குறிப்பிட்ட லக்ஷ்மன் கிரியெல்ல, நாட்டின் சட்டத்திற்கு அமைய அதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு பிரதி சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.

இதன்போது ஆளும் மஹிந்த தரப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் கருத்துக்கு எதிராக கூச்சலிட்டனர். எனினும் லக்ஷ்மன் கிரியெல்லவின் கோரிக்கையை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளாா். 

இதன்போது குறுக்கிட்ட ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குண வர்தன, நாடாளுமன்ற தெரிவு குழுவை அமைக்கும் போது மஹிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.

 நாடாளுமன்ற செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட தினேஷ் குணவர்தன, அரசாங்கம் என்ற வகையில் அதனை முன் னெடுத்துச் செல்வதற்கு தெரிவு குழுவில் பெரும்பான்மை தமக்கு வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ரணில் தலைமையிலான எதிர்தரப்பினர் சார்பில் கருத்து வெளியிட்ட மங்கள சமரவீர, அரசியலமைப்பின் 48 (2) சரத்திற்கு அமைய தற்போது நாட்டில் அர சாங்கமொன்று இல்லையெனத் தெரிவித்துள்ளாா்.

தொடர்ந்து எதிர்தரப்பி னரின் கூச்சலுக்கு மத்தியில் கருத்து வெளியிட்ட ஆளும் தரப்பு அமைச்சரான எஸ்.பி.திஸாநாயக்க, அரசாங்கம் இல்லை என் றால் தெரிவுகுழு இல்லை எனவும் அதனை அமைக்கவும் முடியாதெனத் தெரி வித்துள்ளாா். 

ஆகவே அரசாங்கம் ஒன்று உள்ளது என்பதை அங்கீகரித்து, சட்டரீதியாக நாடா ளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க வேண்டுமெனவும் இதற்கு எதிர்ப்பு தெரி வித்து கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, 14 ஆம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும் பிரதமரும் அரசாங்கமும் தற்போது இல்லையென சபாநாயகர் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

நாடாளுன்ற செயற்பாடுகளுக்கான தேவையான தெரிவு குழுவை அமைப்ப தாயின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் தெரிவுக் குழுவில் பெரும்பான்மையை பெற முடியாதெனத் தெரிவித்துள்ளாா். 

ஆகவே நாடாளுமன்றத்தில் இருக்கும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே தெரிவுக்குழுவின் பிரதிநிதிகளை நியமிக்க முடியும் எனவும் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத குழுவிற்கு தெரிவுக்குழுவில் பெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பது நீதியான விடயம் அல்லவென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சபாநாயகரின் கவனத்திற்கு திருப்பியுள்ளாா்.

இவ் விடயம் தொடர்பில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட் டத்தில் கலந்துரையாடப்பட்டதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரி வித்துள்ளாா்.

இச் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், இன்றைய அமர்வுகளை முடிவுக்கு கொண்டு வருவதுடன், நாடாளு மன்றத்தை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளாா்.