Breaking News

மஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக த.தே.கூட்டமைப்பு!

நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணாகவும், ஜனநாயகத்தை மீறியும் பிரத மராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதென தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங் களை மாற்ற முடியாதென தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிறிலங்கா அரச தலைவருக்கு மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளனா்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் நேற்றைய தினம் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரி பால சிறிசேனவை அவரது அழைப் பின் பேரில் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே தமது  முடிவை எடுத்துரைத்துள்ள னா்.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ள இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து சிறப் பித்துள்ளனா்.

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு யோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென இச் சந்திப்பில் வலி யுறுத்தப்பட்டுள்ளது.

தாம் விடுத்த இந்த வேண்டுகோளை கவனமாக ஆராய்வதாக சிறிலங்கா அரச தலைவர் உறுதியளித்ததாகவும் கூறிய எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ் நிலையை சுமூக நிலைக்கு கொண்டுவருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை வழங்குமென உறுதியளித்த தாகவும் தெரிவித்துள்ளாா்.