வவுனியா நகரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடாத்த தீர்மானம்.!
எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் தமது கோரிக்கையை நிறைவேற்றாவிடில் 19ஆம் திகதியிலிருந்து அனைத்து நகரசபை ஊழியர்களையும் இணைத்துக் கொண்டு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஊழியர்களின் பொதுக்கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக இலங்கை தேசிய அரச பொது ஊழி யர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற பொதுக்கூட்டத் தில் பல்வேறுபட்ட நிலைமைகளில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள் ளது. இதில் முக்கிய விடயமாக கட ந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சபையின் அமர்வின் போது அட்டவணைப்படுத்தப்படாத ஊழியர்கள் தொடர் பான சம்பளப்பிரச்சினை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளது.
அரச நிர்வாகத்தினர் சம்பளம் சீர்செய்யப்பட்டமை சரியென சொல்கின்றார்கள். தொழிலாளர்கள் சார்பாக இச்சம்பளம் சீர் செய்யப்பட்டதை பிழை எனத் தெரிவித்துள்ளாா்கள்.
எனவே இச்சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கு வேறு திணைக்களங்களைச் சேர்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழு ஒன்று வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஊடாக அமைக்கப்பட்டு தீர்வு காண்பதென்று சபையால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் நகரசபை உறுப்பினர் க. சந்திரகுலசிங்கம் வழிமொழிந்தவர் நகரசபை உறுப்பினர் க. சுமந்திரன் எனவே இத் தீர்மா னங்கள் உறுப்பினர்களின் அனுமதியுடன் தீர்மானிக்கப்பட்டு கடந்த ஆறு மாத ங்கள் கடந்த நிலையிலும் தமது சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப் படவில்லை.
என்பதுடன் ஊழியர்களின் மலசலகூடம், ஓய்வு அறை அமைத்தல், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காவல் கடமைகள் நீக்குதல், உள்ளக வெற்றிடம் உடனடியாக நிரப்பப்படவேண்டும், நகரசபையில் மூன்று இலட் சத்திற்கு பெறுமதியாக மரங்கள் களவாடப்பட்டது.
இன்று வரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை போன்ற ஜந்து கோரிக்கைகளை முன்வைத்து இவ்வேலை நிறுத்தப்போராட்டத்தினை முன் னெடுக்கவுள்ளதாக பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய அரச பொது ஊழியர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம் இவ் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமது சங்க உறுப்பினர்கள் ஈடுபடப் போவ தில்லையென சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் நகரசபை ஊழியருமான இராமு சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நகரசபைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் குறித்து நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமியிடம் தொடர்புகொண்டபோது, சபையின் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுபோல் என்னுடன் சேர்த்து ஐவர் கொண்ட குழுவினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளியின் பின்னர் யாழப்பாணத்திலுள்ள உள்ளுராட்சி ஆணையாளரிடம் சென்று குறித்த விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள தாக மேலும் தெரிவித்துள்ளார்.