Breaking News

நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் பொலிஸார் குவிப்பு.!

பாராளுமன்றத்தை அடுத்துள்ள பொல்துவ பகுதியில் இன்று நடைபெறவுள்ள விசேட கூட்டத்தின் காரணமாக விசேட பாதுகாப்பு மற்றும் வாகன போக்கு வரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சருமான ருவான் குணசேகர, பொலிஸ் தலை மையகத்தில் நேற்று மாலை நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி லேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மேலும் தெரிவிக்கைகையில்,

இக் கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 1200 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட வுள்ளனர். பொது மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட விசேட வாகனத்திட்டம் மற்றும் வீதிப்பாதுகாப்பிற்கு பொறுப்பாக செயற்படும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண கருத்து தெரிவிக்கையில்,

தியத்தஉயன மற்றும் பொல்துவ உள் ளிட்ட பாராளுமன்ற சுற்று வட்டத் திற்கு வரும் வாகனங்கள் இன்று நண் பகல் 12.00 மணி தொடக்கம் மட்டுப் படுத்தப்படுமெனத் தெரிவித்துள்ளாா்.

கொழும்பு மற்றும் கடுவெல அத் துருக்கிரிய மாலபேக்கிடையில் செல் லும் வாகனங்கள் மாற்று வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலை வான்கள் மற்றும் பஸ்களும் மாற்று வழிகளில் செல்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும். வாகனங்களை கையாள்வதற்காக மாத்திரம் 300 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளாா்.