Breaking News

இலங்கை இறை­மையை இழந்­து­ள்ளதாக அமெரிக்கா.!

அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­கா­ரத்தில் சீனா­வுடன் இலங்கை செய்­து­கொண்ட கொடுக்கல் வாங்­கலில் இலங்கை தனது இறை­மையை இழந்து நிற்­கின்­றது என்று அமெ­ரிக்­காவின் பாது­காப்பு செய­லாளர் ஜேம்ஸ் மெட்டிஸ் தெரி­வித்­துள்ளார்.

மேலும் சீனா சில நாடு­க­ளுக்கு திருப்பி செலு த்த முடி­யாத கடன்­களை வழங்கி ஆக்­கி­ர­மித்­துக் ­கொண்­டி­ருக்­கின்­றது. இலங்­கையில் என்ன நடந்து என்று பாருங்கள் இலங்கை தனது துறை­முக விட­யத்தில் இறை­மையை இழந்து நிற்­பதாகத் தெரிவித்துள்ளாா்.