Breaking News

தாண்டவம் ஆடிய கஜா புயல் ; 9 பேர் பலி.. 12000 மின் கம்பங்கள் சேதம்.!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. தமி ழகத்தை நோக்கி வந்த இப் புயலுக்கு ‘கஜா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.


கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள் ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை - வேதாரண்யம் இடையே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததனையடுத்து அடுத்த ஒரு மணி நேரத்திற்கு கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.

கஜா புயல் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, கஜா புயலின் கோரத்தாண்டவத்தி னால் தமிழகத்தில் சுமார் 9 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.


தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் சுமார் 12000 மின் கம்பங் கள் சேதமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.


அதே சமயம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப் படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தொடர்புடைய துறைகளுக்கும், அமைச்சர்களுக்கும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.