Breaking News

கிரியெல்ல - சுமந்திரன் ; சபையில் நடந்தது என்ன?

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் நடந்து கொண்ட விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளு மன்ற அமர்வில் மகிந்த அணிக்கு படு தோல்வியும், ரணில் தரப்புக்கு வெற்றி யும் கிடைத்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியை தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாகவும், சபாநாயகர் மற்றும் அனுர ஆகி யோரே இதற்கு முக்கிய காரணம் என் றும் சமூக வலைத்தளங்களிலும் மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவாலும் தெரிவிக்கப்பட்டுள் ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சபாநாயகர் கரு ஜெயசூரிய உரையாற்றும் போது, தமிழ் தேசியக் கூட் டமைப்பின் சுமந்திரன் எழுந்து சபையில் வித்தியாசமாக செயற்பட்டுள்ளார்.

இதில், உரையாற்றுவதற்கு தயாராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாரா ளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் கடும் கோபத்துடன் பாராளு மன்ற உறுப்பினர் சுமந்திரன் எழுந்து சென்றுள்ளாா்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த லக்ஷ்மன் கிரியெல்லவிடம் சுமந்திரன் வந்து, வாக்கெடுப் பினை குரல் பதிவு மூலம் எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.

எனினும் அதற்கு அவசியமில்லை எனவும் இலத்திரனியல் முறைமையில் வாக்கெடுப்பு நடத்த முடியுமென சபாநாயகர் தெரிவித்த நிலையில், சுமந்திர னும் அதை ஏற்றுச் சென்றார்.

இந் நிலையில் இலத்திரனியல் வாக்களிப்பு என்பது பெயர் மூல வாக்கெடுப்பே அதன் மீண்டும் அதனை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை லக்ஸ்மன் கிரியெல்லவிற்கு தெரிவித்த நான் அவரிற்கு இலத்திரனியல் வாக் கெடுப்பு அறிவிப்பு பலகையை சுட்டிக்காட்டினேன் என தெரிவித்துள்ளார்.

என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட வீடியோவில் நான் சீற்றமாக காணப்பட்டது போல தோன்றியிருக்கலாம் ஆனால் நான் சீற்றத் துடன் காணப்படவில்லை எனவும் சுமந்திரன் தெரிவித்தார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

ஐக்கியதேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் சொற்படி நடக்கின்றது என்ற சித்தரிப்பை உருவாக்குவதற்கு சட்டவிரோத அரசாங்கத்தின் ஆதரவா ளர்கள் இவ்வாறான சமூக ஊடக பதிவுகளை மேற்கொள்கி கொழும்பு டெலி கிராவ் தெரிவித்துள்ளது.