Breaking News

அரசியலில் அதிரடி ரணிலைச் சந்திக்கும் மைத்திரி.!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்றைய தினம் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமது பக்கம் 113 பேர் ஆதர வாக உள்ளனர் என்றும் அவர்களின் கையொப்பத்துடன் ரணிலை ஜனாதி பதி இன்று காலை 8.30 மணிக்கு சந்திப் பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் நாடா ளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த அறிவிப்பை சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலமாக விடுத்திருந்தபோதிலும் இரவுப் பொழுது அது குறித்த முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

அதாவது அந்த முடிவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் ரணிலைப் பிரதமராக நியமிக்கமுடியாதென்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதம ருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட்ட கட்சிகளின் தலைவர்களை இன்று காலை சந்திப்பதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள் ளாா்.

எனினும் அவர்கள் அச் சந்திப்பை புறக்கணிக்கப்போவதாக முடிவுசெய்துள்ள தாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளாா்.