Breaking News

இன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன் சபாநாயகரின் நடவடிக்கை!

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ள நிலையில் சபா நாயகர் கரு ஜெயசூரிய, கட்சித் தலைவர்களை 12 மணிக்கு சந்திப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குழப்பங்களின் மத்தியில் நாடாளுமன் றம் கூடவுள்ள நிலையிலேயே இச் சந் திப்பு நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துக் கட் சிகளின் மாநாடு ஒன்றை மேற்கொண் டுள்ளாா்.

அச் சந்திப்பின்போது எவ்வித முடிவுகளும் எட்டப்படாமல் கூட்டம் நிறைவுற் றது. இந்த நிலையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதற்கமைய இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்குமூலம் நிறைவேற்றப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.