Breaking News

மைத்திரி வாக்குறுதியை மீறியதால் சபாநாயகரின் அவசர அழைப்பு.!

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை 3 மணிக்கு கட்சித் தலைவர்களுடன் மீண்டும்அவசர சந்திப்பொன்றினை நடத்தவுள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவினால் மேற் கொள்ளப்பட்ட அதிரடியான அரசியல் மாற் றத்தினைத் தொடர்ந்து புதிய பிர தமராக பதவியேற்ற மஹிந்தவை நாடாளுமன்றில் பெரும்பான்மை யினை நிரூபிக்குமாறு ரணில் அணி யினர் சவால் விடுத்து வருவதோடு, ரணில் தரப்பினரும் தமது பெரும் பான்மையினை நிரூபிக்க வேண்டுமென தெரிவித்து உடனடியாக நாடாளு மன்றினை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளாா்.

எனினும் ஜனாதிபதி மைத்திரி உடனடியாக நாடாளுமன்றினைக் கூட்டாது எதிர்வரும்16ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். அதனைத் தொடர்ந்து உள் நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களின் காரணத்தால் நாடாளுமன்றத்தை இன்று 7ஆம் திகதி கூட்டுவதற்கு தான் நடவடிக்கை எடுத்திருப்பதாக சபாநாய கரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த முதலாம் திகதி வாக்குறு தியளித்துள்ளாா்.

ஜனாதிபதி தெரிவித்த இக் கருத்தினை மறுதினமான 2ஆம் திகதி நடைபெற்ற கட்சித்தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த வாக்குறுதியை மீறிய ஜனாதிபதி சிறிசேன எதிர்வரும் 14ஆம் திகதி தான் நாடாளுமன்றம் கூடும் என கடந்த 4ஆம் திகதி இரவு விசேட வர்த்தமானிஅறிவித்தலொன்றினை வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இச் செயலினால் ஆத்திரமடைந்த சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதியின் செயல் வெறுக்கத்தக்கது, நாடாளுமன்றில் பெரும்பான் மையை நிரூபிக்கும் வரை மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக ஏற்கவே முடியாதென வாக்குறுதியின் பிரகாரம் நாடாளுமன்றத்தை 7ஆம் திகதி கூட்டு வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சபாநாயகர் கடந்த 5ஆம் திகதி காட்டமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளாா்.

அதேவேளை நேற்று தன்னைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவரிடமும் இந்த விவகாரத்தை சபாநாயகர் விலாவாரியாக எடுத்துரைத்துள்ளார். எனினும் 7ஆம் திகதியான இன்று நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரி எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை.

இவ்வாறான நிலையிலேயே சபாநாயகர் கருஜயசூரிய கட்சித் தலைவர்களை இன்றுமாலை அவசரமாகச் சந்திக்கவுள்ளாா். குறித்த சந்திப்பின் போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாட வுள்ளதாக எதிர்பாா்க்கப்படுகின்றது.