Breaking News

வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்தவர் பலி.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை வீடு புகுந்து இனந்தெரியாதவர்களால் நடாத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

.இந்நிலையில் காயமடைந்த நபரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த 54 வயதுடைய பெண் சிகி ச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அன்றைய தாக்குதலில் மரணமடைந் தவர் ஜெயசிறி நிர்மலா தேவியின் கண வரான 66 வயதுடைய ப.ஜெயசிறி ஆவார். இதேவேளை தாக்குதல் செய் தவர் பருத்தித்துறை பொலிஸாரிடம் கடந்த புதன்கிழமை தந்தையால் ஒப் படைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த 43 வயதுடைய நபர் தொடர்ந்தும் யாழ் போதனா மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரி வில் தொடர்ந்தும் அனுமதிக்கப்டட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸாா் முன்னெடுத்துள்ளனா்.