Breaking News

தமிழ், முஸ்லிம் மக்கள் பேரிழப்பைச் சந்திக்க நேரிடும் மனோ எச்சரிக்கை!

நாடாளுமன்றில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத முன்னாள் மஹிந்த ராஜ பக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆட்சியில் இருக்க ஜனநாயக அடிப் படைகள் எதுவும் கிடையாதென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலை வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கனேசன் தெரிவித்துள்ளார்.

தனது அராஜகத்தை பயன்படுத்ததி, ஒருவேளை மஹிந்த ராஜபக்ச தலை மையிலான, அரசாங்கம் வெற்றி பெறுமானால் அந்த வெற்றியின் பின்னர், நாட்டில் பேரினவாத, கொலை, கொள்ளைக்கார, பொலிஸ் - இராணுவ காட்டாட்சியை ஏற்படுத் தும் எனவும், அது நடைபெறுமானால், தமிழ், முஸ்லிம்கள் பேரிழப்பைச் சந் திக்க  நேரிடுமென  எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இந்த விடயம் தொடர்பில் மனோகனேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் இட் டுள்ள பதிவில், ”ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின், பின் கதவு வழியாக வந்த ஒரு குழு சட்டத்தை மீறி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அக் குழுவுக்கு கும்பலுக்கு நிழல் அரசு எனப் பெயர்.

அதைவிட மக்கள் விரும்பி அழைக்கும் மிளகாய் பொடி கும்பல் என்ற இன் னொரு பெயரும் இருக்கிறது. இந்த மிளகாய் பொடி கும்பலின் நோக்கம் இப்படி ஆட்சியை பிடித்துவிட்டு, நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்து, அந்த கால அவ காசத்தை பயன்படுத்தி, பணம்-பதவிகளை காட்டி, பலவீனமான நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி, செயற்கையாக பெரும்பான் மையை சபையில் காட்டி, தமது ஆட்சியை தொடர்வது ஆகும்.

இந்த முயற்சி இன்று சிறுபான்மை கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து இந்த மிளகாய் பொடி கும்பலின் நோக்கம், நாடாளுமன்றத்தை கலைத்து, நாடாளுமன்ற தேர்தலுக்கு போவது ஆகும்.

சட்டப்படி நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது எவர் ஆட்சியில் இருக்கிறார் களோ அவர்கள் தான், தேர்தல் முடியும் வரை காபந்து அரசாங்கமாக இருப் பார்கள்.

இந்த மிளகாய் பொடி கும்பலின் இரகசிய நோக்கம், தேர்தலின் போது “காபந்து அரசு” என்ற பேரில், அரச அதிகாரிகள், பொலிஸ் இராணுவம், அரச தொலைக் காட்சி-வானொலி ஊடகங்கள் ஆகிய ஒட்டுமொத்த அரச இயந்திரத்தையும் பயன்படுத்தி தேர்தலில் ஜனநாயக சக்திகளான எங்களை அடித்து அராஜகம் செய்வது, அவசியமானால் கொலையும் செய்து வெற்றி பெறுவது ஆகும்.

இக் கும்பல், தனது அராஜகத்தை பயன்படுத்தி, ஒருவேளை வெற்றி பெறுமா னால் அந்த வெற்றியின் பின், இந்நாட்டில் ஒரு பேரினவாத, கொலை, கொள் ளைக்கார, பொலிஸ்-இராணுவ காட்டாட்சியை ஏற்படுத்தும்.

இது நடந்தால், நாம் தமிழ், முஸ்லிம்கள் முற்றாக எரித்து துடைத்து எறியப் படுவோம். எமது உரிமைகளை கோர, போராட, ஊர்வலம் செல்ல, ஆர்ப்பாட் டம் செய்ய முதலில் நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டும்.

எம் இன, மத நிகழ்வுகளை நடத்த, கல்வி, கலை நிறுவனங்களை நடத்த, உற் பத்தி, ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், தொழில் செய்ய சுதந்திர சூழல் இருக்க வேண்டும். அதற்கு ஜனநாயகம் அவசியம். ஜனநாயகம் என்பது, அராஜக ஆட் சியில் கானல் நீராக மாறிவிடும்.

இதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதை அறியாமல் இன்று இந்த கும்பலுக்கு தெரிந்தும் தெரியாமலும் ஆதரவு கரம் நீட்டும் காட்டும் எந்த ஒரு சிறுபான்மை அரசியல்வாதியையும் சிறுபான்மை கட்சியையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

இந்த பொது நோக்கில்தான் எம் முரண்பாடுகளை மறந்து இன்று தமிழ்-முஸ் லிம் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். பெரும் அபாயங்களை எதிர்நோக்கும் எங்களுக்கு தமிழ் பேசும் மக்கள், குறிப்பாக நம் இளையோர் அற்ப முரன்பா டுகளை மறந்துவிட்டு ஒன்றுசேர ஆதரவு கரங்களை நீட்டிட வேண்டுகிறேன்." எனத் தெரிவித்துள்ளாா்.