Breaking News

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்காக திட்டம் அரசாங்கம்.!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை நீடிக்குமிடத்து பாராளு மன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தரப்பு சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்து வருவதாகவும் தற் போதைய பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற் சிகள் வெற்றி பெறாவிடின் அதனை அடுத்த தெரிவாக ஜனாதிபதி கொண்டுள் ளதாகவும் அரசாங்க மட்டத்தில் வெளி யாகியுள்ளது.

மேலும் ஜனாதிபதிக்கு எந்தவொரு விடயம் குறித்து உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் 86 ஆவது பிரி வின் ஊடாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே சர்வஜன வாக்கெடுப்பை நடத் துவதா அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதா என்பது குறித்தும் ஆராயப் பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன் னர் பாராளுமன்றத்தை ஒரு வருடத்துக்கு பின்னர் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. ஆனால் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு பின்னரே பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாம்.

ஆனால் அதற்கு இடையில் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அல் லது சபையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான எம்.பி. க்கள் ஆதரவு வழங்கி ஒரு பிரேரணையை கொண்டு வந்தால் பாராளுமன்றத்தை கலைக் கலாம்.

அதனைவிட நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டால் அதனை கார ணம் காட்டி ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்கலாம் என்று ஒரு வாதம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பாராளுமன்றத்தை பெரும்பான்மை ஆதரவுடன் கலைப்பது சாத்திய மற்றதாகவே உள்ளது. காரணம் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி அதனை எதிர்த்து நிற்கின்றது.

எனவே 150 எம்.பி. க்களுடன் இணைந்து யோசனை முன்வைத்து பாராளு மன்றத்தை கலைப்பது சாத்தியமற்றது. எனவே இந்த விடயங்களை கருத் திற்கொண்டு ஜனாதிபதி தனது அதிகாரத்தின் கீழ் பாராளுமன்றத்தை கலைப் பதற்கான முயற்சிகளை எடுக்கலாமென எதிர்பாா்க்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தை கலைக்கும் விடயத்தை இறுதி தெரிவாகவே ஜனாதிபதி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்த பெரெரா கருத்து வெளியிட்டுள் ளார்.

அதில் அவர் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை கலைக்க முயற்சிப்பதாகவும் ஒருவேளை இன்று இரவே (நேற்று நள்ளிரவு) பாராளு மன்றம் கலைக்கப்படலாமெனவும் தெரிவித்துள்ளாா்.

இதேவேளை இது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரிடம் நாம் வினாவியபோது பெயர் குறிப்பிட விரும்பாத அவர் பாராளுமன்றத்தை ஜனாதி பதி கலைப்பதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.