ரணிலை விமர்சித்த மஹிந்தவாதிகள்.!
தனித் தமிழீழக் கோரிக்கையை நிபந்தனையாக வைத்தே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆட்சியமைப்பதற்கான ஆதரவை தெரிவித்துள்ளதாக மஹிந்தவாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனா்.
யானை-புலி ஒப்பந்தத்தின் மற்று மொரு நிகழ்வு டிசெம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் அரங்கேறுவதை அவதானிக்க முடியுமென்று சிறில ங்கா பொதுஜன பெரமுனவின் நாடா ளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளாா்.
பத்தரமுல்லை – நெளும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரோஹித்த போகொல்லாகம இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாா்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்துகொண்ட ஒப்பந்தம் வெகு விரைவில் வெளியாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் தலை வர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கப்போவதில்லை என்பதால் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின ருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனா்.
வேலுப்பிள்ளை பிரபாகரனால் துப்பாக்கிகளைக் கொண்டு செய்ய முடியாமல் போனதை, தற்போதைய அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி சாதித்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்திவரும் கூட் டமைப்பு கோரிக்கையின் அர்த்தம் என்ன? எங்களுக்கு தனியான ஒரு பகு தியை தாருங்கள் என்றே அர்த்தம். நாளைய (12) தினம் நாடாளுமன்றத்தில் யானை-புலி ஒப்பந்தம் அம்பலாகும்”.
நாட்டின் தற்போதைய குழப்பங்களுக்கு பொதுத் தேர்தல் ஊடாகவே நிரந்தர தீர்வு காண முடியும் என்று மீண்டும் வலியுறுத்திய மஹிந்தவாதியான அபேகுணவர்தன, எனினும் பொதுத் தேர்தலை கேட்டாலே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பயந்து நடுங்குவதாக ரெிவித்துள் ளார்.
“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தேர்தல் என்றாலே பயம். அவர் இதுவரை எந்தவொரு தேர்தலிலும் தனியாக வெற்றி பெற்றதில்லை. அவரால் தனியாக வெற்றி பெறவும் முடியாது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும், அவருக்கு மக்கள் ஆணை ஒன்று கிடைக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 105 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடனேயே அவர் பிரதமர் பதவியில் அமர்ந்தார். அவர் ஒரே ஒருமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அதிலும் தோல் வியடைந்தார். அவர் தனித்து வெற்றிபெற்ற தேர்தல் என்று எதுவும் இல்லை.
ரணில் விக்ரமசிங்க கடந்த மூன்றரை வருடங்களுக்கு மேல் பிரதமராக இருந்திருக்கின்றார். அதுவும் அவர் டி.எம்.ஜயரத்ன, ரத்னசிறி விக்ரமநாயக்க போன்று சாதாரணமானக அல்ல, நிறைவேற்று அதிகாரமுடைய பிரத மராகவே செயற்பட்டுள்ளாா்.
அவ்வாறு செயற்பட்ட ஒருவர் ஏன் மக்களிடம் செல்வதற்கு அச்சப்படுகின்றார். மக்களை நம்பாது ஏன் நீதிமன்றத்தை நாடுகின்றார். தான் அச்சமில்லாத பிரதமர் என அவர் கூறுகின்றாரே ஏன் மக்கள் முன்னிலையில் செல்ல வில்லை. செல்வதற்கு அவர் அஞ்சுகின்றார்”.
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசவால் அரசியல் ரீதியாக முடிவெடுக்கும் தைரியம் இல்லை என்பதாலேயே, பிரதமர் பதவி கிடைத்தும் அதனை அவர் பொறுப்பேற்காகது இழுத்தடிப்பு செய்து வருவ தாகவும் மஹிந்தவாதியான ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
“தனக்கு பிரதமர் பதவி தொடர்பில் விருப்பமில்லாமல் இல்லை, எனினும் தான் தனது தந்தையின் பெயரை காப்பாற்றும் வகையில் செயற்படுவதாக சஜித் கூறுகின்றார். இதற்கு கிராமப்புறங்களில் ஒரு கதை கூறுவார்கள்.
ஆசையும், பயமும் பலருக்கும் பல விடயங்களில் ஆசை இருக்கும் எனினும் அச்சமும் இருக்கும். அதுபோலத் தான் சஜித் பிரேமதாசவும். அதனை செயற்படுத்திப் பார்க்க அச்சம் அடைகின்றாா்.
ஏன் அந்த அச்சம். அச்சமின்றி அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள முடி யும். ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு எம்மைப்போன்று முதுகெலும்புடன் செயற்பட முடியாது. அவ்வாறு முதுகெலும்புடன் செயற்படக்கூடியவர்கள் இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியே”.

- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -