எதிர்க்கட்சித்தலைவர் யார்? புயலுக்குப் பிந்திய அமைதியுடன் ஒரு வினா!
அதைவிடவும் கதியில்லை அப்பால் போகவும் விதியில்லை என்ற பழ மொழியை போன்ற ஒரு தோற்றப்பாட்டுடன் சிறிலங்காவின் “அந்த 51 நாட் கள்”அரசியல் நெருக்கடி தற்காலிக ஓய்வுக்கு வந்துள்ளது.
கடந்தஒக்டோபர் 26 வெள்ளிக்கிழமை பெரும்வீராப்புடன் மகிந்தவை பின் கதவு வழியாக பிரதமர் பதவிக்கு நுழைந்து இந்த ஆட்டத்தை ஆரம் பித்து வைத்த அதே மைத்திரி தான் நேற்று ரணிலை முன் கதவு வழியாக அமர்த்தி தனது வெள்ளிக்கிழமை அதி ரடிகளை முடித்து வைத்துள்ளாா்.
ரணில் மீண்டும் பிரதமரானால் ஒரு மணிநேரமேனும் அரசதலைவராக நீடிக்கமாட்டேன் எனவும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணிலுக்காக ஒப்பமிட்டாலும் அவருக்கு பிரதமர் பதவி இல்லை என சவடால்களை விட்ட மைத்திரி இப்போது அவ்வாறு இடம்பெற்று பல மணி நேரமாகியும் அதி உத்த மராம் சனாதிபதியாகவே ஜனாதிபதி மந்தரயவில் இருக்கிறார்.
சிறிலங்காவின் முதற்குடிமகனே இவ்வாறு சொல்லொன்று செயலொன்றாக அங்கிடுதத்தமாடுவது நாட்டின்அரசியல்தரநிர்ணயத்துக்கும் ஒருசான்றிதழ். எனினும் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத சிங்கனாக ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கப் போவதில்லையென்ற தனது தனிப்பட்ட அரசியல் நிலைப் பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்றவர் நாடாளுமன்ற சம்பிரதாயத் துக்கும் ஜனநாயகத்துக்கும் மதிப்பளிக்கவே ரணிலை பிரதமர் பதவிக்காக அழைத்தேன் என்றார்.
ஏறக்குறைய 50 நாட்களை கடந்து நாட்டின்அரசியலமைப்பை முட்டுச்சந்தில் முட்டுப்படவைத்து அரசியல்களத்தை இடியப்பச்சிக்கலாக உருவாக்கி பெரு மைப்பட வைத்தவர் இறுதியில் சிறிலங்கா உச்சநீதிமன்றம் தனது வாயில் கூரிய வாள் ஒன்றைச்செருகியதும் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத சிங்கனாக இவ்வாறு பேசியிருக்கிறார்.
எது எப்படியோ மைத்திரியின் வெள்ளிக்கிழமைக்குழப்பங்களின் முடிவில் சிறிலங்காவின் பிரதமராக மீண்டும் ரணில் காட்சிதருகிறார். பிரதமராகியதும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் தமிழர்களும் கவனிக்கத்தக்க முறையில் செய்தியை சொன்னவர் ஒன்றிணைந்த இலங்கையில் அனை வருக்கும் நீதியான அரசியல் தீர்வு என்றார்.
இதற்காக தமிழ்தேசியத்கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி யுடன் பேச்சுக்களை நடத்தப்போவதாகவும் ரணில் சொன்னார். ஆனால் அர சியல் அமைப்பின் ஊடாக அரசியல் தீர்வு ஒன்று கிட்டவேண்டுமானால் அதற் குரிய அங்கீகாரத்துக்கு தேவைப்படும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை எவ்வாறு அவர் நாடாளுமன்றத்தில் பெறக்கூடும்?
இது ரணிலுக்கு மட்டுமே வெளிச்சமான விடயம் எதுஎப்படியோதமக்கு கிட்டிய இந்தவெற்றிகுறித்து யானைகள் மகிழ்வுடன் பிளிறுகின்றன. இதனை இன்று பகல் கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட அவர்களின் நீதிக்கான போராட்ட பேரணியில் அவதானிக்க முடிந்தது.
இதற்கிடையே இந்துசமுத்திரத்தை மையப்படுத்தி தமது நலன்களை உறுதிப் படுத்துவதற்காக மகிந்தமைத்திரி அணியில் சீனாவும் இதற்குமறுபுறத்தே இந் தியப் பெரியண்ணனும் மேற்குலகமும்; ரணில் என்ற தளத்தில் நின்று இப்போட்டியை நடத்தியதும் பட்டவர்த்தனம்.
ஆக மொத்தம் ரணில் முன்னரங்குக்கு வந்தமை மேற்குலகுக்கும் மகிழ்ச் சியான விடயமே. இதனால்தான் சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் சுபமான முடிவை எட்டியது கண்டு ஐரோப்பியஒன்றியம் மற்றும் கொழும்பில் உள்ள ஒஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயம் போன்ற மேற்குலக மையங்கள் இன்று மகிழ்வுடன் அறிக்கையிட்டன.
மேற்குலகின் இந்த வாழ்த்துகள் மகிந்தாவாதிகளை எரிச்சலுக்கு உள்ளாக்கு கின்றது. இதனால்தான் அண்மைய அரசியல் நெருக்கடியில், அமெரிக்காவின் சீ.ஜ.ஏ பிரித்தானியாவின் எம் – 16 போன்ற புலனாய்வு மையங்களின் தலை யீடுகள் இருந்ததாக உதய கம்மன்பில லபோ லபோ என கத்துகிறார்.
ஆனால் மேற்குலவாழ்த்துகள் கிட்டுவதற்கு முன்னரே இந்தியப் பெரியண்ண னின் பெரிய இடத்து வாழ்த்து வந்திருப்பதை அவதானிக்க வேண்டும் ரணில் பதவியேற்ற கையுடன் டெல்லியின் சவுத்புளொக் அதிகாரமையத்தில் இருந்து (இந்திய வெளிவிவகார அமைச்சகம்) இந்த அறிக்கையிடல் வந்தது எது எப்படியோ ரணிலின் புதிய அமைச்சரவை நாளை நியமிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவையை அமைப்பதில் சில சவால்கள் உண்டு. தற்போதைய நிலவரப்படி ரணில் மேற்பார்த்த ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம் ஒரு தேசிய அரசாங்கம் இல்லை.
ஆயினும் இந்த அரசாங்கத்தை தேசியஅரசாங்கமாக மாற்றவேண்டுமானால் அதனுடன் யாராவது கூட்டணி அமைக்கவேண்டும். இப்போதைய வினா எத் தரப்பு இந்தக்கூட்டணிக்குவாய்ப்பை வழங்கக்கூடும்?
கடந்தமுறையைபோல மைத்திரியின் சிறிலங்காசுதந்திரக்கட்சி உட்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு இந்தமுறைபங்கெடுக்குமா? இதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை.
ஏனெனில் எதிர்க்கட்சியாக செயற்படப்போவதாக வெற்றிலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சொல்கிறது. ஆனால் யானைகள் வெற்றிலை வைத்து அழைத்தால் இந்த நிலைமாறாது என்றல்ல.
இதேபோல இப்போதைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு அல்லது ஜே.வி. பி ஆகி யன இந்த அரசாங்கத்தின் நேரடி பங்காளிகளாகப்போவதில்லை. ஆக மொத் தம் அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தப்படி தேசிய அரசாங்கம் ஒன்று அமை யாமல் விட்டால் அமைச்சரவையின் எண்ணிக்கை 30ஆக மட்டுப்படுத்தப் படுத்தும் நிஜதியாகும்.
அப்படியானால் ரணில் தனது அரசாங்கத்தை தேசிய அரசாங்கமாக மாற்றமுடியாதா? அதற்கு ஒரேயொரு நுட்பமான வழிமட்டுமே உள்ளது. அதா வது இந்த அரசாங்கத்தில் பங்கெடுப்பதாக சிறிலங்கா முஸ்லிம்கொங்ரசுடன் ஒரு புரிந்துணர்வுஒப்பந்தம் உருவாக்கபட்டால் அது தேசியஅரசாங்கமாக மாற்றமடைந்து அமைச்சரவை ஊதிப்பெருக்கப்படக்கூடும்.
கடந்தமுறை இடம்பெற்றபொதுத்தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் கொங்கி ரஸின் மரச்சின்னத்தில் அலிசாஹிர்மௌலானா மட்டுமே போட்டியிட்டு வெற்றியீட்டினார்.
சிறிலங்கா முஸ்லிம்கொங்கிரஸின் ஏனையஉறுப்பினர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற் றனர்.
இதனால் ஒரேஒரு உறுப்பினர் மட்டுமே இருந்தாலும் மரச்சின்னத்தில் ஒரு அந்த உறுப்பினர் இருப்பதால் அதனை மையப்படுத்தி சிறிலங்கா முஸ்லீம் கொங்கிரசுக்கும் ஐ.தேகவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொ ன்று உருவாக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக கொழும்புப்பட்சிகள் கூறு கின்றன சரி ரணில் பிரதமராகி விட்டார்.
புதிய அமைச்சரவையும் நாளை அமைக்கப்படலாம். நாடாளுமன்றமும் நாளை கூடவுள்ளது. அப்படியானால் புதியநிலவரப்படி சிறிலங்காவின் எதிர் கட்சித்தலைவர் யார்? இரா.சம்பந்தனிடம் இந்தப்பதவி தொடர்ந்தும் நிலைத்திருக்கமுடியுமா? அதிலும் சிலவினாக்கள் உள்ளன.
இனிமேல் எதிர்கட்சித்தலைவர் பதவி தமது தரப்புக்கே என மகிந்தாவாதிகள் கொடிபிடிக்க ஆரம்பித்துவிட்டனர் மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பத வியை வழங்க சபாநாயகரை வலியுறுத்தவுள்ளதாகவும் ஜீ.எல். பீரிஸ் கூறு கின்றார். ஆக மொத்தம் இலங்கையின் அரசியல் அதிர்வுகள் தொடரத்தான் போகின்றது.

- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -