மௌனமாக இருப்பதற்காகவே எதிர்கட்சித்தலைவர் பதவி - சிவசக்தி ஆனந்தன் - THAMILKINGDOM மௌனமாக இருப்பதற்காகவே எதிர்கட்சித்தலைவர் பதவி - சிவசக்தி ஆனந்தன் - THAMILKINGDOM
 • Latest News

  மௌனமாக இருப்பதற்காகவே எதிர்கட்சித்தலைவர் பதவி - சிவசக்தி ஆனந்தன்

  எதிர்கட்சித்தலைவர் விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சம்பந்தன் ஐயா விற்கும் இடையில் ஒரு போட்டி இருந்திருந்தது இது தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கேட்டபோது, நிச்சயமாக நான் நினைக்கின்றேன்.

  தெற்கில் ஏற்பட்டிருகின்ற இந்த 50 நாட்களுக் கிடையில் ஏற்பட்டுள்ள போட்டியானது தென் பகுதியினு டைய ஒரு அதிகாரப் போட்டியில் தமி ழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களினுடைய கோரிக்கை களை முன்னிறுத்தாமல் வெறு மனமே ஜனநாயக உரிமை மீறப்பட் டுள்ளது.

  இன்று எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய பதவிக்காக தனியாக நின்று தான் போராடுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. எங்களைப் பொறுத்த வரையில் எதிர்கட்சித் தலைவர் என்பது இந்த நாட்டிலே ஜனாதிபதி பிரதமர் அதற்கு அடுத்த நிலையில் இருக்கின்றது.

  எதிர்கட்சித்தலைவர் இந்த மூன்றரை வருடம் எதிர்க்கட்சித் தலைவர் என் கின்ற பதவியை வைத்துக் கொண்டு பத்துவருடமாக காணாமல் போனவர்கள் கையளிக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள்.

  அல்லது இல்லை என்ற ஒரு பதிலைப் பெற்றுக்கொடுக்க முடியாதளவிற்குத் தான் இந்த நாட்டினுடைய எதிர்க்கட்சித்தலைவர் என்பவர் தமிழ் மக்களுடைய பிரச்சினையை ஜ.நா மனித உரிமைப் பேரவைக்கும் இலங்கை அரசாங்கத் திற்கும் அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதற்காக வாய்மூடி மௌனியாக இருப்பதற்காகத்தான் எதிர்கட்சித்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

  இதனால் தமிழ் மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை இவ்வாறு இன்று வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற காணாமல் ஆக் கப்பட்ட உறவுகளின் கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்குக் கருத் துத் தெரிவிக்கும்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக் கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மௌனமாக இருப்பதற்காகவே எதிர்கட்சித்தலைவர் பதவி - சிவசக்தி ஆனந்தன் Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top