Breaking News

திட்டமிட்டுள்ள உத்தேச அரசியல் சாசனம்; கூட்டமைப்பின் தீர்மானம்.!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி நாடாளு மன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ள உத்தேச அரசியல் சாசனத்தை முழுமை யாக ஆராய்ந்த பின்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறித்த தீர்மானத்தை எடுக்குமென அக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளாா்.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப் பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மத்தியாபரணம் ஏப்ர ஹாம் சுமந்திரனே இந்த உத்தேச அர சியல் சாசனத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனா்.

சுமந்திரனின் அரசியல் சாசனமே பெப்ரவர நான்காம் திகதி நாடாளு மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும், மஹிந்த வாதிகளும் பிரசாரம் தொடுத்துள்ளனா்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான சுமந்திரன் அங் கம் வகிக்கும் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, உத்தேச அரசியல் சாசனம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட் டதன்  ஆய்வு செய்து அதன்பின்னரே அது தொடர்பில் கூட்டமைப்பினர் இறுதி முடிவினை எடுக்குமெனத் தெரிவித்துள்ளாா்.

சிறிலங்கா ஜனாதிபதியுடன் இணைந்து ஆட்சிக்க விழ்ப்பை மேற்கொண்டு அதனை தக்கவைத்துக்கொள்ள முடியாது தோல்வியைத் தழுவிய மஹிந்த ராஜபக்ச தற்போது எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அப் பதவியும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற் றுக்கொண்டதால் அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துவிட்டதாக கூறிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்,

மஹிந்தவிற்கு எதிர்கட்சித் தலைவராக பதவி வகிக்க தகுதி இல்லை என்று சவால் விடுத்துள்ளது. எதிர்க்கட்சி பதவியினை தமக்கு பெற்றுக்கொள்வ தற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவிடம் இருந்து எதிர்கட்சித் தலைவர் பதவியினை பறிக்க முயல்வதுடன்,

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் என்பதாலேயே அவரை பழிவாங்கும் வகையில் கூடடமைப்பினர் மஹிந்தவை இலக்கு வைத்துள்ளதாகவும் மஹிந்தவாதிகளும், அவர்களது விசுவாசிகளான சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்புக்களும் தொடர்ச் சியாக குற்றம் சுமத்துகின்றனா்.

இக் குற்றச்சாட்டுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து பறிபோன ஆட்சி அதிகாரத்தை மீளப் பெற்றுக்கொடுப்பதற் காக நாடாளுமன்றிலும்,

அதேவேளை நீதிமன்றிலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஏன் தமிழ் மக்களின் பிரச் சனைகளை தீர்ப்பதில் அந்த அளவிற்கு அக்கறை காண்பிப்பதில்லை என்று தமிழர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதிருக்கும் காழ்ப் புணர்ச்சி காரணமாகவே சிலர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதாகத் தெரிவித்துள்ளாா்.