Breaking News

சட்டத்திற்கு மாறாக அமைக்கப்பட்ட கடைகள் அகற்றப்படுமா? நகரசபையிடம் சமூக ஆர்வலா்கள்.

வவுனியா நகர்ப்பகுதியில் நகர சபைக்குச் சொந்தமான இடங்களிலும் விதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரிய இடங்களிலும் சட்டவிரோதமாக அமைக் கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை அகற்ற நகரசபை நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வவுனியா நகர்ப்பகுதியில் வீதிகளை ஆக்கி ரமித்து பல சட்டவிரோதமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில நகர சபைக்கு சொந்தமான வீதிகளையும் ஆக்கி ரமித்து அமைக்கப்பட்டுள்ளதுடன் வீதி அபி விருத்தி அதி காரசபைக்கு சொந்தமான தர்மலிங்கம் வீதி சந்தியிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் வவுனியா நகரசபை நீதிமன்றத்தினை நாடி சட்ட நடவடிக்கை களில் ஈடுபடாமையினால் குறித்த சட்டவிரோத கடைகள் சீரமைக்கப்பட்டு நிரந்தர கட்டிடங்களாக மாறியுள்ளன.

இதற்குமப்பால் வெளிப்புறமாக தகரத்தினால் அமைக்கப்பட்ட கடைகள் உட் புறமாக சீமெந்து கட்டிடங்களால் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் நகரசபை நடவடிக்கை மேற்கொள்ளாத நிலை காணப்பட்டுள்ளது.

தர்மலிங்கம் வீதி சந்தியிலுள்ள இடத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள கடை கள் நிரந்தர கட்டிடங்களாக அமைக்கப்பட்டு தற்போது அவை மத ஸ்தல மொன்றின் காணி என உரிமை கோரப்பட்டுள்ளது.

எனினும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆட்சியில் உள்ள வவுனியா நகர சபை இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரியதே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.