Breaking News

உயர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பதவிப் பிரமாணம்.!

மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்க ளும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதி யரசர் ஒருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனா். உயர் நீதிமன்ற நீதியர சர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் புதி தாக இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன் னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனா்.

அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பி.டீ.சூரசேன, மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதுடன்,

மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கே.பி.பெர்ணான்டோ புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.