ஒருமித்த நாட்டிற்குள் நிரந்தர தீர்வை காண ஒத்துழையுங்கள் - சம்பந்தன்.!
சமஷ்டி அடிப்படையில் அரசியல் தீர்வை தமிழ் மக்கள் கோரி நிற்கும் நிலை யில், ஒருமித்த நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை எட்டிவிட அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமை யான ஒத்துழைப்பு வழங்கி மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக் கிய தேசியக் கட்சி அரசாங்கம், கூட் டமைப்பின் ஒருமித்த நாடு என்ற கோட்பாட்டையும் நிராகரித்துள்ள நிலையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இராஜ வரோதயன் சம்பந்தன், புதுவருடத்தை முன் னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த காலத்தில் கைநழுவிய வாய்ப்புகளை அறிந்து அதன்மூலம் புத்தம்புது வழிகளை நோக்கி எம்மை இட்டுச்செல்லக்கூடிய, வரலாற்றில் மிக முக்கி யமான காலப்பகுதியே இன்று மலர்கின்றது என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மலர்ந்துள்ள ஆங்கில புதுவருட பிறப்பை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்து வந்த வருடத்தில் எமது வாழ்க்கையில் முகங்கொடுக்க நேர்ந்த வெற்றி தோல்விகளை பற்றியும் நிறை குறைகளை பற்றியும் மீண்டும் மீட்டிப் பார்ப்பதற்கான சிறந்த தரு ணமாகுமென ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தை மீண்டும் மீட்டிப்பார்ப்பதன் மூலமே மனிதன் வளமான எதிர் காலத்தை அடைகின்றான் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, கடந்த வரு டத்தின் அனுபவங்களிலிருந்து கற்கவேண்டிய பாடங்களைக் கற்று அவற்றை சீர்தூக்கிப் பார்ப்பதன் மூலமே புதிய எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக்கிக் கொள்ள முடியுமெனத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு, மலரும் 2019 ஆம் ஆண்டில்; ஒழுக்கம், நல்லிணக்கம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை அடையக் கூடிய பரந்த பாதையில் முன்பை விட கூடுதல் கரிசனையுடனும் கவனத்துட னும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரி வித்துள்ளார்.
அனைவரது வாழ்க்கையும் வளமும் செழிப்பும் மிக்கதாக அமைய வேண்டு மெனவும், எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் எனவும் மனப்பூர்வமாக பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித் துள்ளார்
ரணில் - சவால்களை முறியடித்து, இறைமையை உறுதிப்படுத்தியவாறு இந்த புதுவருடத்தை வரவேற்க கிடைத்தமை அனைவரும் பெற்றுக்கொண்ட வெற் றியாகுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில புதுவருட பிறப்பை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இன, மத, கட்சி பேதமின்றி ஜன நாயகத்தை வெற்றிபெறச் செய்வதற்காக அணிதிரண்ட மக்களுக்கு இச் சந் தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் தனது வாழ்த்துச் செய்தி யில் விவரித்துள்ளார்.
அதிகார வெறி கொண்ட அரசியல் சூழ்நிலையில் கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் கூட எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வருடங்களில் நாம் சமூக, அரசியல் சீர்திருத்தங்கள் பலவற்றை மேற்கொண்டதாகவும் நாகரீ கமான,
நீதி நியாயம் மிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு தாம் மேற் கொண்ட அந்த நடவடிக்கைகள் தமக்கு பலத்தினையும் துணிச்சலையும் வழங்கியதால் தாம் அரசியலமைப்புக்கு முரணான சூழ்ச்சியைத் தோல் விடையச் செய்தோமென பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரி வித்துள்ளார். மஹிந்த - ஸ்ரீலங்காவின் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜ பக்சவும் புதுவருட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
புதிய நம்பிக்கை கொண்ட ஆண்டாக புதிய வருடம் இருப்பதற்கு அனைத்து இலங்கையர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மதம் மற்றும் இனம் அடிப்படையிலான வேறுபாடுகளை புறந் தள்ளி அனை த்து இலங்கையர்களும் எதிரி படைகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க ஒற் றுமைப்படுவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மக்களினது அனைத்து எதிர்பார்ப்புக்களும் பூர்த்தியாகி அனைத்து முயற்சிகளும் வெற்றிபெறுவதற்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக வும் எதிர்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பந்தன் - நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் பிரிக்க முடியாத பிளவு படாத ஒருமித்த நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அடைந்திட முன்வருமாறு ஸ்ரீலங்கா தலைவர்களுக்கு தமிழ் தேசிய கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தில் இந்த அழைப்பை விடுத்துள்ள இரா.சம்பந்தன், மலர்ந்துள்ள இந்த புத்தாண்டானது இலங்கை வாழ் மக் களுக்கு செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமாக அமைய தனது வாழ்த்துக் களைத் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஒரு புதிய வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் இவ் வரு டமானது இந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பினையும் கொண்டு வருகிற ஆண்டாக அமைய பிரார்த்தனை செய்கிறேன் எனவும் அவர் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடமாவது சாதகமான பாதகமான நிகழ்வுகளினூடாக பல்வேறு படிப்பினைகளை எமக்கு கொடுத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள இரா. சம்பந்தன், இந்த படிப்பினைகளை எமது வாழ்வினை வளப்படுத்திக் கொள் வதற்கு பயனாக்கிக் கொள்ளும் அதேவேளை மற்றவர்களின் வாழ்விலும் நன்மையை ஏற்படுத்த பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
.சமூகங்களிடையே பிரிவினையை கொண்டுவரும் பாதக காரணிகளுக்குள் அகப்பட்டு போகாமல் அதேவேளை, சமூகங்களை இன மத அடிப்படையில் பிரிக்கும் குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட பிரிவினை வாதிகளுக்கெதி ராகவும் செயற்பட இந்த புதிய வருடத்தில் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் தமது நீண்டகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இந்த புதிய வருடத்தில் அடைந்திட வேண்டுமென பிரார் த்தனை செய்கிறேன் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் பிரிக்க முடியாத பிளவுபடாத ஒருமித்த நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அடைந்திட முன்வருமாறு அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரை அழைத்து நிற்கிறேன் எனவும் இரா.சம்பந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஸ்வரன் - வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாழ்த்து செய்தியில் இலங்கை சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த புதிய ஆண்டிலாவது நிறைவேற்றுமா என கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று மலர்ந்துள்ள 2019 ஆம் ஆண்டின் புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பல எதிர்பார்ப்புக்களுடன் 2019ஆம் ஆண்டு பிறக்கின்றது எனவும் மக்கள் தமது புதிய ஜனாதிபதி, மாகாண, நாடாளுமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஆண்டாக இவ்வாண்டு மாற்றமடையு மெனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை சர்வதேசத்திற்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்ற இதுவரையில் என்ன செய்தது என்பது குறித்து ஜெனிவாவில் அறி க்கை சமர்ப்பிக்க வேண்டிய ஆண்டாகும் என தமது வாழ்த்து செய்தியில் தெரிவித் துள்ளார்.
2018 ஆம் ஆண்டு டிசெம்பர் 31க்கு முன்னர் எமது மக்களின் காணி களைத் திருப்பிக் கொடுக்க ஜனாதிபதியால் ஆணையிடப்பட்டிருந்தும், படை யினரால் தவணை கோரப்பட்டுள்ளது எனவும் அதேபோல் ஜெனிவாவிலும் தவணை கேட்கப்படலாம்.
எமது பிரச்சனைகளைக்காட்டி, தாமதித்து, தீர்வு ஏதும் தராது, தமக்கேற்ற தீர்வுகளை எம்மேல் திணிக்க அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும் ஆண்டாகவும் இது அமையலாம் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எது எவ்வாறிருப்பினும் இந்நாட்டு மக்கள் தம்முள் ஐக்கியத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தி நிறைவுடன் பயணிக்கும் ஒரு ஆண்டாக 2019 அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்‘ எனவும் தெரிவித்துள்ளார்.

- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -