த.தே.கூ மீது பழி தீர்க்கும் நடவடிக்கையாகவே ஜனாதிபதியால் கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம்.!
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா அவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீது கொண்ட கோபத்தை பழிதீர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் அமைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித் துள்ளாா்.
கிழக்குமகாண ஆளுநராக ஹிஸ் புல்லா அவர்களை ஜனாதிபதி நியமித் தமை தொடர்பாக ஊடகவியலாளரி டம் கருத்து தெரிவிக்கும் போதே இவ் வாறு தெரிவித்துள்ளாா்.
ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு அதை பிரதமரோ அமைச்சர்களோ நியமிப்ப தில்லை. தற்போது கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற ஏறக்குறைய ஒருவருடங்கள் மட்டுமே உள் ளது. அதற்கிடையில் ஆளுநர்கள் மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை ஆனால் ஜனாதிபதி அவர்கள் தமது விருப்பத்துக்கு அமைவாக அதைச் செய் துள்ளார்.
கிழக்கு மகாணத்தின் ஆளுநராக ஏற்கனவே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்த ஹிஷ்புல்லா அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பத வியை வேண்டுமென்றே இராஜானாமா செய்து அவருக்கு பதவி வழங்கி இருப் பது தமிழ்தேசிய கூட்டமைப்பு மீது கொண்ட ஆத்திரத்தை ஜனாதிபதி இதன் மூலம் சாதித்து விட்டார் என்பதே உண்மை.
கிழக்கு மகாண ஆளுநராக இதுவரை ஒரு தமிழ்பேசும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த எவருமே நியமிக்கவில்லை அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தால் அவர் 2015ஆம் ஆண்டு தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றபோது அவருக்கு அந்த நல்ல எண்ணம் ஏன் வரவில்லை.
நல்லாட்சி என்ற பெயரில் கடந்த 2018 அக்டோபர் 25இவரை இடம்பெற்ற ஆட் சியில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் ஆளுநர் ஒருவரை நிய மிக்க மனம் வராத ஜனாதிபதிக்கு தற்போது அந்த எண்ணம் வந்ததையிட்டு பலத்த சந்தேகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த 52இநாட்களில் இடம்பெற்ற ஜனாதிபதி அவர்களின் தன்னிச்சையான பிரதமர் மைத்திரி நியமனம் பாராளுமன்றத்தை சட்டத்துக்கு முரணாக கலைத்தமை தொடர்பாக,
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட சட்ட ரீதியான செயல்பாடு மூல மாக மீண்டும் ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டமை மீண்டும் பிரதமராக ரணிலை தெரிவுசெய்ய தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமை என் பதெல்லாம் ஜனாதிபதி மைத்திரி அவர்களுக்கு எரிச்சல் ஊட்டும் சம்பவங் களாக அமைந்திருக்கலாம்.
எஞ்சிய ஒருவருடமாவது அதற்காக பழி தீர்க்கும் படலமாக கிழக்கு மகாண ஆளுநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக எண்ணத்தோன்றுகிறது.
தற்போது நியமனம் பெற்ற ஹிஷ்புல்லா அவர்கள் மீது தமிழ்மக்கள் அச்சம் கொள்ள காரணம் அவரின் கடந்த கால செயற்பாடுகளில் சில தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தோற்று வித்தன குறிப்பாக ஒட்டமாவடியில் இந்து ஆலயத்தை அகற்றி அதில் கடைகளை அமைத்தது அதற்காக ஒரு நீதி பதியை தாமே இடம் மாற்றியதாக பகிரங்கமாக இனவாத கருத்தை தெரிவித் துள்ளாா்.
கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்ற கருத்தையும் ஒருதடவை கூறியிருந்தார். அதைவிட மட்டக்களப்பு மாவட்டம் புல்லுமலையில் போத்தல்களில் குடிநீர் நிரப்பு தொழில்சாலை அமைப்பதற்காக அப்பகுதி மக்களின் சம்மதம் இன்றி நிறுவுவதற்கான முயற்சி மேற்கொண்ட விடயங்களும்,
காணிகள் கொள்வனவு தொடர்பாக சில அதிருப்திகளும் பரவலாக அவர்மீது தமிழ்மக்களின் பார்வை உண்டு இவ் விடயங்கள் தொடருமானால் எதிர் காலத் தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் தற்போது உள்ள ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படுமோ என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.
இந்த காரணங்களால் மட்டுமே ஆளுநர் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் பக்கசார்பாக செயல்படாத ஒருவரை கிழக்கு மகாண ஆளுநராக நிய மித்து இருக்கலாம் என்ற கருத்து கிழக்கு மகாண தமிழர்கள் மத்தியில் உண்டு.
மேல் மாகாண ஆளுநராக நியமித்த அசாத்ஷாலி அவர்களை கிழக்குமகாண ஆளுநராக நியமித்திருப்பின் ஓரளவு அந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள கூடியதாய் இருந்திருக்கும். கடந்த 2015இம் ஆண்டு ஐனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்களை தெரிவு செய்வ தற்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாக்குகளும் கணிசமான அளவு பங்க ளிப்பு செய்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பும் முழுமையாக இருந்தது அப்படி இருக்கும் நிலையில் கிழக்கு மகாண தமிழ் மக்களின் மனங்களை புரிந்து கொள்ளாமல் அவர்களின் கருத்துக்களை அறியாமல் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் ஆலோசனை பெறாமல் கிழக்கு மகாண ஆளுநராக ஹிஷ்புல்லா அவர்களை ஜனாதிபதி நியமித்தது அவரின் சுயநல அரசியல் செயல்பாடு என் பது தெளிவாகத் தெரிகிறது.
தற்போது ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஹிஷ்புல்லா அவர்களின் செயல்பாடு எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கு பாதகம் இல்லாமல் அரச நியமனங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு செய்யாமல் அபிவிருத்தி விட யங்களில் தமிழ் கிராமங்கள் பாதகம் ஏற்படாமலும் பக்கச்சார்ப்பு இல்லாமலும் அமையுமாக இருந்தால் சிறப்பெனத் தெரிவித்துள்ளாா்.