Breaking News

தந்தையின் மரண வீட்டிற்கு செல்லாது அணிக்காக விளையாடிய ஆப்கான் வீரர்.!

தனது தந்தை இறந்த செய்தி அறிந்தும் சொந்த நாட்டுக்குச் செல்லாமல் தனது அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானை ரசிகர்களும், சக வீரர்களும் பாரட்டை தெரிவித்துள்ளனா்.

ரஷித் கான் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பாஷ் இரு பதுக்கு 20 போட்டிகளில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளை யாடி வருகிறார். இந் நிலையில் கடந்த 30 ஆம் தகதி அவரின் தந்தை காலமாகி விட்டதாக அவருக்கு தக வல் வழங்கப்பட்டது.

எனினும் அவர் தனது சொந்த நாட்டுக்குச் செல்லாமல், அவுஸ்திரேலியாவில் தனது அணிக்காக விளையாடி தந்தைக்கு மரியாதை செலுத்தியதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.