Breaking News

நெருக்கடிக்குள் சிக்குண்ட இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை.!

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் களினால் அண்மையில் வெளியிடப்பட்ட 280 பக்க அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல்களையடுத்து இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

தொழில்சார் நிபுணர்கள் அமைப்புகள், பொதுநலன் குழுக்கள் மற்றும் சர்வ தேச வாணிபத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் எதிர்ப்பு தீவிரமடைந்தி ருப்பதால், இச் சுதந்திர வர்த்தக உடன் படிக்கையை மீளாய்வு அல்லது ரத் துச் செய்யும் வரை அதை இடைநிறுத் துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டிருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள் ளன.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினால் டாக்டர்கள், பொறியியலாளர்கள் மற் றும் சட்டத்தரணிகள் உட்பட பல தொழில்சார் நிபுணர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறி 8 மனுதாரர்கள் அரசியலமைப்பின் கீழ் அதன் செல்லுபடித்தன்மை குறித்து பிரச்சினை கிளப்பி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் ஒரு தருணத்தில் அதை இடைநிறுத்தம் செய்யுமாறு பணிப்புரை ஜனாதிபதி யிடமிருந்து வந்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் ஒரு தடவை விசாரணைக்கு எடுக்கப்பட்டு பின்னொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் வழக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதி களாகவுள்ளனா்.

இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன் படிக்கையின் பிரதம பேச்சாளரான கே.ஜே.வீரசிங்க உடல் நலக்குறைவைக் காரணம் காட்டி பதவி விலகியுள்ளாா்.

இதையடுத்து அபிவிருத்தி தந்திரோபாயங்கள், சர்வதேச வாணிப அமைச் சுக்கு இதுவிடயத்தில் பிரச்சினைகள் அதிகரித்தன. சகல முனைகளில் இருந் தும் குறிப்பாக ஜனாதிபதி மட்டத்திலிருந்து நெருக்குதல்கள் அதிகரித்ததை அடுத்து நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அவதானிப்புக் களையும் விதந்துரைப்புகளையும் சர்வதேச வாணிபத்துறை நிபுணர்கள் குழு வொன்று நுணுகி ஆராய்ந்து வருகின்றது என்று அமைச்சு வட்டாரங்கள் ஊட கங்களுக்குத் தெரிவித்துள்ளன.

அறிக்கையில் காணப்படுகின்ற பாதகமான அவதானிப்புகளுக்கு மாற்று யோச னைகளை அமைச்சு சமர்ப்பிக்கும். அந்த யோசனைகள் இவ்வாரம் பகிரங்கப் படுத்தப்படுமெனக் கூறிய வட்டாரங்கள் உடன்படிக்கையை இடை நிறுத்து மாறு ஜனாதிபதி விடுத்ததாகக் கூறப்படுகின்ற எந்தவொரு பணிப்புரை தொடர் பில் தங்களுக்கு எதுவும் தெரியாதெனத் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூருடனான உடன்படிக்கையொன்று தொடர்பில் இலங்கையின் கருத் துக்கோணத்தில் இருந்து நடைமுறைச்சாத்தியத் தன்மை மற்றும் செலவு - பலாபலன் குறித்த ஆய்வு எதுவுமே செய்யப்படாமல் பேச்சுவார்த்தைச் செயன் முறைகள் முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் குழு கருத்து வெளியிட்டுள்ளது.

அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவினால் உடன்படிக்கை கைச்சாத்திடப்படு வதற்கான நடைமுறைகளைத் துரிதப்படுத்துவதற்காக வேண்டமென்றோ அல்லது அறியாப்பிரகாரமோ சில பாரதூரமான தவறுகள் நடைபெற அனு மதிக்கப்பட்டுள்ளது.

உடன்படிக்கையை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை நிபந்தனைகளுடன் கூடிய அங்கீகாரத்தையே வழங்கியிருந்தது. அதில் அமைச்சரவை குறித்துரை த்த நிபந்தனைகளை கவனத்திற்கெடுக்காமல் அமைச்சர் நடந்து கொண்டார் என்றும் நிபுணர்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.