Breaking News

ஜனவரி 5 ஆம் திகதியை தேசிய தினமாக பிரகடனப்படுத்த தீர்மானம்.!

பௌத்த மத புனித நூலான திரிபீடகத்தை தேசிய மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான தேசிய தினம் எதிர்வரும் 5 ஆம் திகதி சனிக் கிழமை மாத்தளை அலுவிகாரையில் நடைபெறவுள்ளதாக புத்த சாசனம் மற் றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளாா்.

ஜனாதிபதி செயளகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியா லாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித் துள்ளாா்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் பௌத்த மத புனித நூலான திரிபீட கத்தை தேசிய மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான அமைச்ச ரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளதோடு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவும் இவ் விடயம் தொடர்பாக முன்னதாகவே தெரிவித்துள்ளாா்.

அதன்படி 5 திகதி இவ் உற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உற்சவ தினத்தன்று நாடளாவிய ரீதியிலுள்ள சலக அரச நிறுவனங்கள் மற்றும் பௌத்த விகாரைகளில் பௌத்த கொடி ஏற்றப்பட வேண்டும்.

அத்தோடு அனைத்து விகாரைகளிலும் பூஜை வழிபாடுகளும் நடைபெறும். மாத்தளை அலுவிகாரையில் நடைபெறவுள்ள உட்சவத்தில் கலந்து கொள்வ தற்கு சுமார் 2000 பௌத்த மதகுருமார்கள் மற்றும் வெளிநாட்டு இராஜ தந்தி ரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.