நெல்லியடியில் சிசுவின் சடலம் மீட்பு.!
பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக நெல்லியடி பொலிசார் தெரிவித்துள்ளனா்.
நேற்று மாலை கரவெட்டி ஞானா சாரியார் சுடலைக்கு அண்மையாக சிசு ஒன்றின் சடலம் காணப்படுவதாக நெல்லியடி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசுவின் சட லம் கை, தலைப்பகுதிகளில் காயங்களுடன் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளதுடன் இன்று பருத்தித் துறை நீதிமன்றின் உத்தரவு பெறப்பட்டு சிசுவின் சடலம் மீட்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனா்.
சம்பவ இடத்தில் பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளதுடன் இன்று பருத்தித் துறை நீதிமன்றின் உத்தரவு பெறப்பட்டு சிசுவின் சடலம் மீட்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனா்.