Breaking News

மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது அதிகரிக்கலாமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறி யுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின் னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்க ளில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற் காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.