மீன் பிடிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு.!
மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் வலையை இழுப்பதற்கு படகில் இருந்து கடலுக்குள் குதித்தபொழுது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனா்.
இச் சம்பவம் நேற்று வாகரை மாங் கேணியை அண்டிய கடல் பகுதியில் நடைபெற்றுள்ளதுடன் சடலமும் அன்றைய தினமே மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் மாங்கேணி மாவடி யோடையைச் சேர்ந்த கே. தவசீலன் (வயது 18) என அடையாளம் காணப் பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.