முஸ்லிம்கள் மீது வெறுப்­ப­டைவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் ­- ரவூப் ஹக்கீம் - THAMILKINGDOM முஸ்லிம்கள் மீது வெறுப்­ப­டைவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் ­- ரவூப் ஹக்கீம் - THAMILKINGDOM
 • Latest News

  முஸ்லிம்கள் மீது வெறுப்­ப­டைவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் ­- ரவூப் ஹக்கீம்

  இன்­றைய பதற்­ற­மான சூழ்­நி­லையில் சந்­தே­கங்­களும், நிச்­ச­ய­மற்ற தன்­மை யும் மக்­க­ளது உள்­ளங்­களில் குடி­கொண்­டுள்ள வேளையில், சமகங்­க­ளுக்­கி­டையில் அமை­தியும் ஒற்­று­மையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்­க­ளிப்பைச் செய்­வது ஊட­கங்­களின் கடமையும், பொறுப்­பு­மாகும் என்று ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரிவித் துள்ளார்.

  பெரும்­பான்மை சமூ­கத்­தினர் முஸ்­லிம்கள் மீது வெறுப்­ப­டையக் கூடி­ய­வாறு சாதா­ரண சம்­ப­வங்­களை கூட ஊதிப் பெருப்­பித்து பூதாக­ர­மாக்­கு­வதை ஊட­கங்­களில் பணி­பு­ரிவோர் தவிர்த்து கொள்ள வேண்­டு­மென வின­ய­மாக வேண்டிக் கொள்­வ­தா­கவும் கூறி­யுள்ளார்.

  நாட்டின் பிர­தான செய்தி ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, உயிர்த்­தெ­ழுந்த ஞாயிறு தினத்­தன்று தீவி­ர­வாத முஸ்­லிம்கள் சிலர் மேற்­கொண்ட கீழ்த்­த­ர­மா­னதும் மிலேச்­சத்­த­ன­மா­ன­து­மான படுகொ­லை­களின் விளை­வாக பெரும்­பா­லான முஸ்­லிம்கள் அச்சத்­திலும், அதிர்ச்­சி­யிலும் ஆழ்ந்து அவ­திப்­ப­டு­கின்­றனர்.

  இந்த இக்­கட்­டான வேளையில் மேற்­கொள்ளும் நோன்பில் மிக்க பயத்­தி­னூ­டாக இலங்கை முஸ்­லிம்கள் தாம் இத்­த­கைய ஆபத்தில் சிக்கிக் கொள்­வ­தற்கு வழி­கோ­லிய ஏதுக்கள் பற்றி சுய­ப­ரி­சோ­தனை செய்து கொள்ள வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

  பிர­தான ஊட­கங்­க­ளினால் தொடர்ச்­சி­யாக மேற்கொள்ளப்பட்டுவரும் மிகவும் பார­தூ­ர­மான செயற்­பா­டு­களை தளர்த்­தி­னா­லே­யன்றி சகிப்­புத்­தன்­மை­யோடும், பச்­சாத்­தா­பத்­தோடும் சுய­வி­மர்­ச­னத்­திற்­கான வழி­வ­கை­களை கண்­ட­றி­வது எமது சமூ­கத்தைப் பொறுத்­த­வரை மிகவும் சிக்­க­லான காரி­ய­மாக ஆகி­விடும்.

  அர­சியல் ரீதி­யாக நெறிப்­ப­டுத்­தப்­படும் ஊடக நிறு­வ­னங்கள் ஒரு சமூ­கத்­த­வரை மற்­றொரு சமூ­கத்­தவர் மீது ஆத்­தி­ர­மூட்டச் செய்­வதன் மூலம் மோதலை வளர்ப்­ப­தல்­லாது, அர­சாங்­கத்­தையும் ஆளும் தரப்­பி­லுள்ள அர­சி யல் கட்­சி­க­ளையும் அவ­மா­னத்­திற்கு உள்­ளாக்­கு­வ­தாகும்.

  சில பிர­தான ஊட­கங்கள் “இஸ்­லா­மோ­போ­பியா” எனப்­படும் இஸ்­லாத்தின் மீதான பீதி மனப்­பான்­மையை நய­வஞ்­ச­கத்­தன்­மை­யோடு கையாண்டு, சட்டம் தனது கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு முன்­னரே தாமாக தீர்ப்பை வழங்­கி­ வி­டு­கின்­றன.

  அரசியல் உள்நோக்கங்கள் கொண்ட சக்திகள் அரசாங்கத்தின் மீது அடர்ந்தேற மக்களை தூண்டுகின்ற வேளையில், அரசாங்கம் அதனை கட்டுப்படுத்துவதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்; போது ஊடகங்கள் தமது சொல்லாட் சியை உரிய முறையில் கையாள்வதற்கான பாரிய பொறுப்பை சுமந்திருக் கின்றன.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: முஸ்லிம்கள் மீது வெறுப்­ப­டைவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் ­- ரவூப் ஹக்கீம் Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top