Breaking News

ரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா?

ரத்தினதேரர் உண்மையைப்பேசும் மதகுருவாக இருந்தால் எங்கள் மக்கள் போராடிய எங்கள் மக்களுக்கு கிடைக்கின்ற கன்னியா மற்றும் நீராவியடி பிரதேசங்களை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பாரா என செல்வம் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளாா். 

வவுனியா தோணிக்கல் ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்கு கம்பரெ லிய வேலைத்திட்டத்தில் அமைக்கப் பட்ட அலுவலகம் மற்றும் கடினப் பந்து பயிற்சிக்கூடத்தினை திறந்து வைத்து உரையாற்றுகையில் இவ் வாறு தெரிவித்துள்ளாா்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசாங் கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவ ளிக்கின்றது. இதனூடாக கம்பரலிய போன்ற திட்டத்தினூடாக அபிவிருத்திகள் மக்களுக்கு சென்றடையும் வேலைத்திட்டங்களை நாம் செய்து வருகின் றோம்.

சிலர் கூறுகின்றனர் நாம் கம்பரெலியவை கிராமப்புறங்களில் வழிநடத்துவ தில்லை என. சிலர் தாம் அரசாங்கத்துடன் இல்லை எதிர்க்கட்சியில் உள் ளோம் தமிழ் தேசியக்கூட்டமைப்புத்தான் அரசாங்கத்துடன் இருக்கின்றது என கூறுகின்றனர். எனவே சந்தர்ப்பவாத கதைகளை பேசுவதற்கு நாம் அனுமதி கொடுக்கமுடியாது.

கம்பரெலியவைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத்தில் உள்ள அத்தனை தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகின்றது. அதில் பல அபிவிருத்திகளை செய்து வருகின்றோம். அபிவிருத்தி விடயங்களில் கவனம் செலுத்துவதென்பது தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு கிடைத்த வரப் பிரசாதமாகும்.

எங்களை பொறுத்தவரையில் அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி ஆகிய இரண்டு விடயங்களையும் ஒரே நேர் பதையில் கொண்டு செல்ல வேண்டிய வர்களாக இருக்கின்றோம். ஏனெனில் எமது மக்கள் யுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக உள்ளார்கள்.

இன்றும் மலசலகூடங்கள் இல்லாத வீடுகள் இருந்து கொண்டே இருக்கின்றது. ஆகவே எங்கள் செயற்பாட்டின் ஊடாக மக்களுக்கான அபிவிருத்தியை கொண்டு செல்லும் செயற்பாட்டை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இதற் குமப்பால் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த அத்துரலிய ரத்தின தேரர் மிகவும் மோசமான கருத்தை மக்களை கவரவேண்டும் என்பதற்காக பேசி முடித்தி ருக்கின்றார்.

தமிழ் மக்கள் புத்த கோவிலை விரும்பவில்லை என்றால் நாங்களே எடுத்து விடுவோம் என தெரிவித்துள்ளார். இது வேடிக்கையாக இருக்கின்றது. பாராளு மன்றத்தில் எமது உறுப்பினர்கள் எமது பாரம்பரிய இடமான கன்னியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் அமைக்கப்படுவது தொடர்பாக வும் முல்லைத்தீவு நீராவியடியில் பிள்ளையார் ஆலயத்தில் புத்த கோவிலை அமைப்பது தொடர்பாகவும் தமது ஆட்சேபனையையும் பல தடவைகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இது ரத்தின தேரருக்கு தெரியாதா? அல்லது தெரியாதது போல் உள்ளாரா.?

என்பது வேடிக்கையான விடயமாகவுள்ளது. புத்தர் ஞானம் பெற்ற நாளான இன்றுகூட நீராவியடியில் சிங்களவர்கள் புத்தகோவில் அங்கு வரவேண்டும் என போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

 ரத்தினதேரர் உண்ணாவிரத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் தன்னுடைய பேச்சை கேட்பார்கள் என நினைக்கின்றார். அவர் உடனடியாக செய்யவேண்டிய வேலை இந்த இரண்டு புத்தகோவில்களையும் எடுக்க வேண்டும். உண்மை யைப்பேசும் மதகுருவாக இருந்தால் எங்கள் மக்கள் போராடிய எங்கள் மக்களுக்கு கிடைக்கின்ற இரு பிரதேசத்தையும் நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.

எமது மக்கள் பாராம்பரியமாக புனிதத்துவத்துடன் வழிபடுகின்ற இடங்களை ரத்தின தேரர் உண்மையில் புத்த மதத்தினை பின்பற்றுகின்றவராக அதன் அடிப்படையோடு செயற்படுகின்றவராக இருந்தால் இந்த இரண்டு விடயத்தி லும் தன்னுடைய கவனத்தை செலுத்தி அந்த இடங்களை மீள எமது மக் களிடம் கையளிக்கவேண்டுமெனக் கோரியுள்ளாா்.