Breaking News

'பட்டிக்கலோ கம்பஸ்' இற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் எவை ?

'பட்டிக்கலோ கம்பஸ்' ஷரியா சட்டத்தை அல்லது இஸ்லாம் மதத்துடன் தொடர்புபட்ட அடிப்படைவாதிகளை உருவாக்கும் நிறுவனமாக செயற்படுத் தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாக எம்மால் நம்பப்படுவதனாலும் இந் நிறுவனத்துக்கு கிடைத்த நிதிகள்,

காணிகள் சட்டவிரோதமானவை என் பதனாலும் இந்நிறுவனத்தை அவசர கால சட்டவிதிகள் அடிப்படையில் அரசு உடனடியாக சுவீகரிப்பதுடன் குற்றவாளிகளுக்கு எதிராக உடனடி யாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண் டுமென கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற் பார்வைக் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 'பட்டிக்கலோ கம்பஸ்' தொடர் பில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட கல்வி மற்றும் மனிதவள அபிவி ருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு சமர்ப்பித்த அறிக்கையிலேயே இப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பேராசிரியர் ஆசு மார சிங்க இந்த அறிக்கையை இன்று சபையில் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில் கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு வினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள் பரிந்துரைகள் வரு மாறு.

2013-08-15 ஆம் திகதி ஹிரா பவுண்டேஷன் நிறுவனத்துக்கும் அப்போதைய இளைஞர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அமைச்சுக்கும் இடையில் இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஹிரா பவுண்டேஷன் சார் பில் அப்போது பிரதியமைச்சராகவிருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அரசாங் கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் அரசாங்கத் துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது. எனவே ஆரம்பத்தி லேயே தவறு இழைக்கப்பட்டுள்ளது. 2016-07-17ஆம் திகதியே ஹிரா பவுண்டேஷன் என்ற பெயரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படுகி றது.

இருந்தபோதும் 2015ஆம் ஆண்ட ஜுலை மாதம் 3ஆம் திகதி திகதியிடப்படாத கடிதமொன்று உயர்கல்வி அமைச்சுக்கு அனுப்பப்படுகிறது. அதில் குறித்த நிறுவனத்தை உயர்கல்வி நிறுவனமாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள் ளது.

பதிவு செய்யப்படாத நிறுவனமொன்றுக்கு எவ்வாறு உயர்கல்வி அந்தஸ்துக் கோரமுடியும் என்ற கேள்வி எழுகிறது. ஆரம்பத்தில் 'பட்டிக்கலோ கம்பஸ்' ஹொலிச் பிறைவட் லிமிட்டட் என்ற பெயரிலேயே நிறுவனம் ஆரம்பிக்கப் பட்டது.

பின்னர் இது 'பட்டிக்கலோ கம்பஸ்' பிறைவட் லிமிட்டட் எனப் பெயர் மாற் றப்பட்டது. இவ்வாறு பெயர் மாற்றப்பட்ட பின்னர் பழைய பெயரில் உள்ள இலங்கை வங்கியின் கணக்கிற்கு 3.6 பில்லியன் ரூபா வைப்பிலிடப்படுகிறது.

'பட்டிக்கலோ கம்பஸ்' ஹொலிச் என்ற பெயரில் இல்லாத வங்கிக் கணக்கிற்கு எவ்வாறு பெருந்தொகை வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவர முடியும்?. இது வெளிநாட்டு நிதி சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதால் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இப் பணம் தொடர்பில் விசாரித்தபோது ஹிரா பவுண்டேஷனின் தற்போதைய தலைவர் ஹிராஸ் ஹிஸ்புல்லா கூறியது, வெளிநாட்டிலிருந்து நன்கொடை யாகக் கிடைத்தது என்பதாகும். எனினும், நாம்'பட்டிக்கலோ கம்பஸுக்கு சென் றிருந்தபோது அங்கு ஹிஸ்புல்லா கூறியது, கடனாகப் பெற்ற பணம் என்பதா கும்.

ஐவரிடமிருந்து கடன் பெற்றதாக ஒப்பந்தங்களை காண்பித்துள்ளபோதும் ஒரே யொரு நபரிடமிருந்தே வங்கி கணக்கிற்கு பெருந்தொகை பணம் அனுப்பப் பட்டுள்ளது. இதுபற்றி மத்திய வங்கி மற்றும் இலங்கை வங்கியின் அதிகா ரிகளிடம் விசாரித்துள்ளோம்.

செலாவணி கட்டுப்பாட்டு ஒழங்குவிதிகள் பின்பற்றப்படவில்லையென்பது தெளிவாகிறது. இந்த நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு அசேலபுர பிரதேசத்தில் 35 ஏக்கர் பரப்பளவுடைய காணி மகாவலி அதிகார சபையினால் 30 வருடகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தவிரவும் 8 ஏக்கர் விஸ்தீரணமான காணியில் சட்டபூர்வமற்ற நிர் மாணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கு வாகரை பிரதேச செயல ளரிடம் அனுமதி பெறப்படாமல் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் காணிகளில் சட்டவிரோத கட்டடம் அமைத்தமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்நிறுவனம் தொடர்பான ஆவணங்களை பரீட்சித்தபோது இலங்கை முத லீட்டு சபை மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகிய நிறுவனங்களுக்கு முன் வைக்கப்பட்ட தகவல்களில் Bachelor of Arts in Sharia and Islamic Studies எனக் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் ஷரியா சட்டம் அல்லது இஸ்லாம் மதம் சார்ந்த உலமாக்களை உருவாக்குவது இதன் பிரதான நோக்கமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.

ஹிஸ்புல்லாவினால் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு பிரசாரப்படுத்தப் பட்ட  வீடியோவின் ஊடாகவும் இது உறுதிப்படுத்தப்படுகின்றது.

 இந்நிறுவனம் வேறு கல்வி பாட நெறிகளை நடத்துவதாகக் கூறிக்கொண்டு மறைமுகமாக ' ஷரியா சட்டத்தை அல்லது இஸ்லாம் மதத்துடன் தொடர்பு பட்ட அடிப்படைவாதிகளை உருவாக்கும் நிறுவனமாக செயற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாக எம்மால் நம்பப்படுகின்றது.

அத்துடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் அரேபிய கட்டடக் கலைகளை பெரிதும் கொண்டிருப்பதால் அரபுமயப்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகமும் உள்ளது.

இலங்கையில் தற்போது நிலவிவரும்பிரச்சினைகளை எடுத்து நோக்கும் போது ஷரியா மதம் அல்லது அடிப்படைவாத மதத்தை கற்பிக்கும் நிறுவனங் கள் உருவாகுவது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவ தனால் இவ்வாறான நிறுவனங்களுக்கு ஒருபோது அனுமதியளிக்கக் கூடா தென குழு கருதுகின்றது.

இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டு தற்பொழுது நடைமுறைப் படத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தையும் பயன்படுத்தி குறித்த நிறுவ னத்தை அரசாங்கம் உடனடியாக சுவீகரிக்க வேண்டும்.

குற்றவாளிகளுக்கு எதிராக துரித சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், துறைசார் மேற்பார்வைக் குழுவின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அமைச்சரவைக்கு முன்வைக் கப்படும்.

இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டு 6 வாரங்களுக்குள் அமைச்சரவையின் அவதானிப் புக்கள் பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடப்பட வேண்டும் என்றும் அந்த அறிக் கையில் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன் றும் பாராளுமன்ற குழு அறையில் குழுவின் தவிசாளர் ஆசு மாரசிங்க தலை மையில் நேற்று நடத்தப்பட்டது.இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், ஐ.தே.க எம்பி விஜயபால ஹெட்டியாராச்சி, எதிர்க்கட்சி எம்பி சிசிர ஜயக்கொடி ஆகியோரும் கலந்து சிறப்பித்துள்ளனா்.