"முஸ்லிம் ஊர்காவல் படையினரின் ஆயுதங்கள் களையப்படவில்லை": கருணா
"இராணுவத் தளபதிக்கு வாக்களித்த தமிழ் மக்கள் பாதுகாப்புச் செயலாளருக்கு வாக்களிப்பதில் தவறில்லை: கிழக்கு மாகாண தமிழர்களின் இருப்பினை பாதுகாக்க வேண்டியது தமி ழ்த் தலைவர்களின் கடமை"
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம்களுக்கு விற்கப்படவில்லை. இந்திய படைகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய இராணுவத்தின் ஆயுதங்களே பெருமளவில் முஸ்லிம் தரப்புக்களுக்கு வழங்கப்பட்டன.
அத்துடன் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் கிழக்கில் உருவாக்கப்பட்ட முஸ் லிம் ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முழுமையாக களையப்படவில்லையென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
அச்செவ்வி நிறைவுப்பகுதி வருமாறு,
கேள்வி:- விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் முஸ்லிம் தலைமைகளுக்குமான சந்திப்பின்போது தனியலகு பற்றி பேசப்பட்டதா?
பதில்:- முஸ்லிம் தலைமைகள் பேச்சு வார்த்தைகளின்போது தனியலகு கோரிக்கையை முன்வைத்திருந்தார்கள். குறிப்பாக, நோர்வே தலைமையிலான பேச்சுக்களின்போது ஹக்கீம் தலைமையிலான பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். ஆனால், நாம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகள் வடகிழக்கு இணைந்த தாயகத்திற்காகவே ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள். வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயகம் என்பதை யாரும் மறுக்க முடியாது. முஸ்லிம்கள் வர்த்தக நோக்கத்திற்காக கிழக்கில் வந்து களமிறங்கியவர்களாக காணப்படுகின்றார் கள்.
முதன்முதலாக முஸ்லிம் ஆண்களே கல்முனைக்குடியில் வந்திறங்கினார்கள். இவ்வாறு தான் அவர்களின் வரலாறு இருக்கின்றது. அப்படியிருக்கையில், வடகிழக்கு தமிழர்களின் பாரம்பரிய தாயகம். தமிழர்களுக்கு தாயகம் கிடைக்கின்றபோது முஸ்லிம்களுடன் பேச்சுக்களை நடத்தி தீர்வினை வழங்குவோம் என்ற முடிவுக்கே வந்திருந்தோம்.
ஏனென்றால் தனிநாடு கோரி நாம் போராடிக்கொண்டிருக்கையில், முஸ்லிம்களும் தனியலகைக் கோருகையில் அவை கிடைப்பதென்பது சாத்தியமற்ற விடயமாகும். அதற்காக முஸ்லிம்களை எமது நிருவாகத்திற்குள் அடக்குவதற்கு நாம் விரும்பவில்லை.
ஆனால், முஸ்லிம்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. வடக்கும் கிழக்கும் இணைவதை எதிர்ப்பதில் முதலாவது முஸ்லிம் பிரதி நிதி ஹிஸ்புல்லாஹ் ஆவார். வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்றார். ஆனால், அவர் என்ன நோக்கத்திற்காக கூறுகின்றார் என்பது தெரியாதுள்ளது.
கேள்வி:- வடக்கு, கிழக்கு இணைப்பில் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது?
பதில்:- வடக்கு கிழக்கு எமது பூர்வீக தாயகம். அதனை சட்டரீதியாக பிரித்து வைத்துள்ளார்கள். நாம் எமது தாயகத்தினை தனி நாடாக அங்கீகரிக்குமாறு கோரி போராடியிருந்தோம். இப்போது எமது தாயகத்தின் உரிமைகளை வழங்குமாறு கோருகின்றோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அதனை ஏற்றுக்கொண்டிருந்தார்.
அத்துடன் 13இற்கு அப்பாற்சென்று அதிகாரங்களை வழங்குவேன் என்றும் கூறியிருந்தார். அதனை நாம் சரியாக பயன்படுத்தியிருக்கவில்லை. இந்த விடயம் சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடிய போது அவர்கள் மஹிந்த ராஜபக் ஷவுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு விரும்பவில்லை.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாருடன் அதுகுறித்து கலந்துரையாடியிருந்தீர்கள்?
பதில்:- மஹிந்த ராஜபக் ஷவின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்டவர்களுடன் நான் கலந்துரையாடியிருந்தேன். ஆனால், அதனை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு கூட்டமைப்பு விரும்பவில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் கூற்றின் மீது நம்பிக்கை இல்லையென்றே கூறினார்கள்.
பூகோள ரீதியான அரசியலை அவதானிக்கின்ற போது, மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை. எமக்குள்ள மக்கள் ஆணை பலத்தினை வைத்துக் கொண்டு தான் நகர்வுகளை செய்ய வேண்டும். அதனைவிடுத்து சர்வதேசம் வரும், தீர்வு வழங்கும் என்று கூறிக்கொண்டிருப்பது வேடிக்கையான விடயமாகும்.
கேள்வி:- கிழக்கில் தமிழர்கள் இருப்பு கேள்விக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுவதை எப்படி பார்க்கின்றீர்கள்?
பதில்:- நூற்றுக்கு நூறுவீதம் உண்மையான விடயம். இதற்கு தமிழ்த் தலைமைகளின் தவறுகளே பிரதானமாக காணப்படுகின்றன. கிழக்கில் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் தமிழ் முதலமைச்சர் ஒருவரை உருவாக்க முடி யும்.
தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கான வாக்குப்பலத்தினை தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள். அந்த வாக்குப்பலத்தினை யாரும் பயன்படுத்துவதாக இல்லை. போர் நிறைவடைந்து கிழக்கில் தேர்தல் நடத்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் நடத்தப்பட்ட போது மஹிந்த ராஜபக் ஷவினை நேரில் சந்தித்திருந்தேன்.
போர் முடிவின் பின்னர் தீர்வொன்று ஏற்பட வேண்டுமாயின் கிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக நியமியுங்கள் என்று கோரியிருந்தேன். நான்கு ஆசனங்களைப் பெற்ற சந்திரகாசனை(பிள்ளையானை) எத்தனையோ எதிர்ப்புக்களை தாண்டி மஹிந்த ராஜபக் ஷ முதலமைச்சராக நியமித்திருந்தார்.
பின்னரான காலப்பகுதியில் வெறும் ஏழு ஆசனங்களை எடுத்த நான் கிழக்கு மாகாணத்தினை ஆட்டிப்படைக்கின்றேன் என்று மு.கா தலைவர் ஹக்கீம் இழிவாக உரைக்கும் அளவிற்கு கூட்டமைப்பின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. கூட்டமைப்பிற்கும் எனக்கும் எவ்விதமான தனிப்பட்ட முரண்பாடுகளும் இல்லை.
ஆனால், கிழக்கு மாகாண தமிழர்களின் இருப்பினை பாதுகாக்க வேண்டியது தமிழ்த் தலைவர்களின் கடமையாகின்றது. ஆகவே அதனை ஆணைபெற்ற கூட்டமைப்பின் தலைவர்கள் செயற்படுத்தாமலிருப்பதே அவர்கள் மீதான எனது குற்றச்சாட்டுக்கு காரணமாகின்றது.
கேள்வி:- விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?
பதில்:- விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளை கொச்சைப்படுத்துவதற்கு நான் விரும்பவில்லை. அவர்கள் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்து விட்டு வெளியேறினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அளவிற்கு உணர்வற்ற நிலையில் விடுதலைப் புலிகள் போராளிகள் இருக்கவில்லை.
கேள்வி:- போரின் பின்னரான சூழலில் துணைக்குழுக்களின் ஆயுதங்களை முழுமையாக களைந்து ஜனநாயகத்தினை நிலைநாட்டியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ கூறுகிறார். அப்படியிருக்கையில், முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக களையப்பட்டிருக்கலாமல்லவா?
பதில்:- முஸ்லிம்கள் ஊர்காவல் படையில் இருந்த காலத்தில் ஆயுதங்கள் பெருமளவில் வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக களையப்படவில்லை. அந்த ஆயுதங்கள் அவர்களிடத்தில் இருக்கின்றன என்பது உண்மையான விடயமாகும்.
இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்த காலத்தில் தமிழ்த் தேசிய இராணுவம் (ரி.என்.ஏ)உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசிய இராணுவத்தினை விடுதலைப் புலிகள் அழித்த தருணத்தில், அவர்களின் பெருமளவான ஆயுதங்கள் முஸ்லிம் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. இவ்வாறு தான் முஸ்லிம்களுக்கு ஆயுதங்கள் கிடைப்பதற்கு வழிகள் ஏற்பட்டன.
கேள்வி:- கிழக்கு ஆளுநர் மீது நீங்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற போதும் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகின்றது எனக் கருதுகின்றீர்கள்?
பதில்:- ஆளுநராக இருக்கும் ஹிஸ்புல்லாஹ் மீது எனக்கு தனிப்பட்ட முரண்பாடுகள் எவையும் இல்லை. ஆனால், ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு பலத்த எதிர்ப்புக்கள் உள்ளன. தாக்குதல் சம்பவங்களின் பின்னர் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பயங்கரவாதி சஹ்ரானுடன் கைலாகு கொடுத்த புகைப்படம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான நிலைமைகளில், ஜனாதிபதியோ, அரசாங்கத்தரப்பினரோ அவரை அழைத்து ஒருவார்த்தை கூட இவ்விடயம் குறித்து வினவாத நிலைமையே இருக்கின்றது.
மாறாக, கிழக்கு மாகாணத்திற்கு ஜனாதிபதி ஆளுநருடன் வருகிறார். சாய்ந்தமருதுவில் தற்கொலைதாரிகள் உயிரிழந்த இடத்தினைச் சென்று பார்வையிடுகிறார். ஆனாலும் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான தேவாலயத்தினையோ காயமடைந்தவர்களையோ சென்று பார்க்கவில்லை.
ஜனாதிபதிக்கும், கிழக்கு ஆளுநருக்கும் இடையில் இருக்கும் உறவுகள் என்ன என்பது குறித்து தெரியாதுள்ளது. ஆனால், இத்தகைய செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியான நிலைமையை உருவாக்கியுள்ளது.
மறுபக்கத்தில் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு ஆளுநர் பதவியில் நீடிப்பதற்கு அனைத்து தமிழர்களும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் தான் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் கிழக்கு ஆளுநர் இருப்பதானது இனங்களுக்கிடையிலான விரிசலை மேலும் அதிகரிப்பதாகவே அமையும். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு எவ்வாறு பறிபோகின்றது என்பதை நான் நன்கு அறிவேன்.
நான் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருக்கவில்லை. ஆனால், முஸ்லிம்களின் பெயரால் முன்னெடுக்கப்படும் ஏகாதிபத்தியத்தினை முழுமையாக எதிர்க்கின்றேன். தொடர்ச்சியாக அதற்கு எதிராக குரலெழுப்பியே வருகின்றேன்.
விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவனாக நான் இருக்கின்றேன். அக்காலத்தில் தமிழர்கள் அனைவரையும் விடுதலைப் புலிகளாகவே சித்தரித்தார்கள். அந்த அனுபவத்தினைக் கொண்டிருக்கும் நாம் முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக கொள்ள முடியாது என்பதிலும் தெளிவாக இருக்கின்றோம்.
கேள்வி:- சஹ்ரான் சம்பந்தமான தகவல்களை நீங்கள் அறிந்து வைத்திருந்தீர்களா?
பதில்:- காத்தான்குடியில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஊடுருவல் காணப்படுகின்றது. நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள் என்ற விடயங்கள் ஊடகங்களில் பிரசுரமாகும் அளவிற்கு வெளிப்படையாக இருந்தன. காத்தான்குடியில் 63பள்ளிவாசல்கள் இருக்கின்றன.
இவற்றில் எட்டுப்பள்ளிவாசல்கள் வித்தியாசமான போக்கினைக் கொண்டிருக்கின்றன என்ற தகவல்களும் வெளியாகியிருந்தன. சஹ்ரான், முதலில் ஓலைக்குடிசையிலேயே பள்ளிவாசலை அமைத்திருந்தார். தற்போது அது மாளிகை போன்று உள்ளது. இதற்கான நிதி எங்கிருந்து வந்தது, யார் அனுமதியை வழங்கியது? என்பதை அரசாங்கம் விசாரணைக்கு உட்படுத்த வேண் டும்.
இத்தகைய ஒருவருடன் தேர்தலுக்காக கைலாகுகொடுத்ததாக ஹிஸ்புல்லாஹ் கூறுகின்றார். இப்ராஹிம் ஹாஜியுடன் அமைச்சர் ரிஷாத் வர்த்தக தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் ஆதாரங்கள் உள்ளன. ஆகவே, இவர்கள் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டார்களா இல்லையா என்பதற்கு அப்பால் இவர்களை பதவிகளிலிருந்து இடைநிறுத்தி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
ஒப்படைத்த வாகனத்தை வைத்திருந்தமைக்காக என்னை கைது செய்தார்கள். புலனாய்வுப்பிரிவால் அரியநேத்திரன், சிறிதரன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் விசாரணைக்காக அழைக்கப்படுகின்றார்கள். தலைவரின் படத்தை வைத்திருந்தமைக்காக பல்கலை மாணவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்.
இவ்வாறு தமிழர் தரப்புக்கு ஒரு நீதி காணப்படுகையில், இத்தனை குற்றச்சாட்டுக்கள் காணப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகளை ஆகக்குறைந்தது விசாரணைக்கு கூட உட்படுத்தாதிருப்பது ஏன்? இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஒரு நீதியும், முஸ்லிம்களுக்கு இன்னொரு நீதியும் காணப்படுகின்றதா?
கேள்வி:- உங்களுடைய ஆட்சிக்காலத்தில் தான் சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகத்திற்கான அனுமதி வழங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அக்காலத்தில் இதுதொடர்பில் ஏன் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை?
பதில்:- ஆரம்பத்தில் இந்த பல்கலைக்கழகம் கிங் அப்துல்லா கெம்பஸ் என்று தான் நிர்மாணிக்கப்படவிருந்தது. இதனை நான் எதிர்த்தேன். மஹிந்த ராஜபக் ஷவிடத்தில் இதனை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினேன். எனக்கு ஆதரவாக மறைந்த அஸ்வர் எம்.பி.யும் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
அதனைத்தொடர்ந்தே குறித்த பல்கலைக்கழகத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எனினும் நான் தொடர்ந்தும் எதிர்த்து வந்தேன். இருப்பினும், வாகரைப் பிரதேச சபையூடாக பாரியளவில் காணிகள் வழங்கப்பட்டன. தொழிற்பயிற்சி அமைச்சும் இந்த விடயத்தில் தவறுகளை இழைத்து விட்டது.
இருப்பினும், அப்போது அமைச்சராக இருந்த டளஸ் மக்களுக்கு நன்மை அளிக்கும் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டதாகவே கூறுகின்றார். இவற்றை முழுமையாக விசாரணை செய்ய வேண்டும். குறித்த பல்கலைக்கழகத்தின் கட்டட அமைப்பு அரேபிய கட்டடக்கலையை ஒத்ததாகவே உள்ளது. அதுவே தவறானதாகும். ஆகவே இதனை முழுமையாக அரசுடமையாக்கி கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும்.
கேள்வி:- கிழக்கில் இனங்களுக்கிடையில் சுமுகமான நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்?
பதில்:- தாக்குதல் சம்பவங்களைத்தொடர்ந்து கிழக்கில் பதற்றமான நிலைமையொன்று இருந்தது. இருப்பினும் தமிழ், முஸ்லிம் தரப்புக்களுடன் நான் நேரடியாகவே கலந்துரையாடி அமைதியான நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளேன்.
தாக்குதல் நடைபெற்ற தேவாலயங்கள் ஒருமாதத்திற்குள்ளேயே புனரமைப்புச் செய்யப்படுகின்றன. கிரான் குளத்தில், ஆரையம்பதி, ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்காக நாம் நினைவுத்தூபியொன்றை நிறுவி நினைவுக்கூரலை முன்னெடுக்கலாம்.
அத்தகைய செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று நாம் கருதுகின்றோம். ஆனால், காத்தான்குடியில் இடம்பெற்ற சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் அந்தப்பள்ளிவாசலில் தற்போதும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவ்வாறே பேணி வருகின்றார்கள்.
வரவேற்பினை அரேபிய மொழியில் எழுதுகின்றார்கள். இந்த நிலைமைகள் தவிர்க்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் இந்த விடயத்தினை பயன்படுத்தி அரசியல் செய்வதைக் கைவிட வேண்டும். முஸ்லிம் சமயத்தலைவர்களும் இந்த விடயத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும். அரேபிய சிந்தனைகளைத் தவிர்த்து இலங்கைக்குள் வாழும் அனைவரும் இலங்கையர்கள் என்ற மனோநிலையை உருவாக்க வேண்டும்.
கேள்வி:- கிழக்கில் ஊர்காவல் படையொன்றை ஸ்தாபிப்பது பற்றி பேசப்படுகின்றதா?
பதில்:- ஊர்காவற்படை ஸ்தாபிப்பது குறித்த பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், ஒரு இனத்துக்கு எதிராக பிறிதொரு இனத்தினை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது.
ஆகவே அந்த விடயம் அவசியமில்லை என்பதை தமிழ் இளைஞர்களுக்கு கூறியுள்ளதோடு கடந்த காலத்தினை உதாரணப்படுத்தி இத்தகைய விடயங்களில் சிக்கவிடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
கேள்வி:- தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான ஐக்கியம் சம்பந்தமாக பேசப்படுகின்ற நிலையில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- குண்டுத் தாக்குதலின் பின்னர் தான், பல தமிழ்ப் பிரதிநிதிகள் இதுபற்றி அதிகம் சிந்திக்கின்றார்கள். கிழக்கில் உருவாக்கப்படும் தமிழர் கூட்டமைப்பு தொடர்பில் எம்முடன் சிவில் பிரதிநிதிகள் கலந்துரையாடினார்கள். நாம் அதற்கு தயாராகவே உள்ளோம்.
எம்மைப் பொறுத்தவரையில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் எமது தமிழ்ச் சமூகத்தினை காப்பாற்றக்கூடிய தலைமைகள் யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றே கருதுகின்றேன். அரசியல் கட்சியை ஸ்தாபித்து செயற்படுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அதற்காக நாம் மட்டும் தான் என்ற கருத்தினை மையப்படுத்த முடியாது. ஒரு கட்சியை அழிக்கும் வகையில் செயற்பட முடியாது.
ஆகவே கொள்கை அடிப்படையில் கிழக்கில் தமிழர் கூட்டமைப்பு கட்டியெழுப் பப்படுமாகவிருந்தால் அதில் பங்கேற்கவும் முழுமையாக வரவேற்கவும் தயாராகவுள்ள முதல் நபராக நானே இருப்பேன்.
கேள்வி:- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதி பதித் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் உங்களு டைய நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?
பதில்:- தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து நாட்டை பாதுகாக்கும் ஒருவர் ஆட்சி யில் அமரவேண்டும் என்ற சிந்தனை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆகவே அத்தகைய வொரு தலைமையை ஏற்றுக்கொள் வதற்கு நாமும் தயாராகவே உள்ளோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போரை தலைமைத்தாங்கி நடத்திய இராணு வத்தளபதிக்கு வாக்களிக்குமாறு கூறியது. அப்படியிருக்கையில், இராணுவச் சீருடையை அணியாத பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஒருவருக்கு ஏன் ஆதரவளிக்க முடியாது. இதுபற்றிய தெளிவும் மக்களுக்கு உள்ளது.