திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
உள்நாட்டுச் செய்திகள்
- கொழும்பு – வௌிச்சுற்றுவட்ட அதி வேக வீதியின் மூன்றாம் கட் டத்தின் நிர்மாணப்பணிகளில் ஏற்பட்டுள்ள குழறுபடிகள் காரணமாக பல பில்லி யன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள் ளது.
- பொரளை பொலிஸ் நிலைய போக்கு வரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாகியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணை வழங் கப்பட்டுள்ள 8 சந்தேகநபர்களை எதிர்வரும் 12ஆம் திகதி அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட் டுள்ளது.
- 162 கோடி ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்தமை தொடர்பில் சுமார் 10 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சக்வித்தி ரணசிங்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட விசா ரணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட் டுள்ளது.
- கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்நுழையும் மற்றும் வௌி யேறும் பகுதிகளில் காணப்படும் விருந்தினர் பிரிவிற்கு பயணி ஒருவர், விருந் தினர்கள் இருவரை அழைத்துச்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா செய்ததால் வெற்றிடமான 3 அமைச்சுப் பதவிகளுக்கான பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வௌிநாட்டுச் செய்திகள்
01. பாகிஸ்தானின் முன்னாள் ஜனா திபதி அஸிவ் அலி ஸர்தாரி (Asif Ali Zardari) நிதி தூய்தாக்கல் குற்றச் சாட் டில் அந்நாட்டு ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள் ளார்.02. காஷ்மீரில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.