"முஸ்லிம் பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும்"
பதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் தமது அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, கூட்டாக பதவி விலகியமை சர்வதேச மட்டத் திலும் தவறான நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசியல்வாதிகளும் பொறுப்பற்ற விதமாக கருத்துக்களை குறிப்பிட்டு பிரச்சினைகளை தீவிரப்படுத்தியுள்ளார்கள். அரசி யல்வாதிகளின் கருத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு ஆரம்பத்திலே ஒரு விதி முறைகளை அரசாங்கம் உருவாக்கியிருக்க வேண்டும்.
அரசியல் தேவைகளுக்காக எல்லை மீறி செயற்பட்டுள்ளமையினால் சாதா ரண மக்கள் இன்று பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்துள் ளாா்.