சஹ்ரானின் போதனைகளில் கலந்துள்ள 51 பேர் கைது - நளின் பண்டார
சஹ்ரானின் போதனைகளில் கலந்துகொண்ட 51 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெறுமனே போதனைகளில் மட்டுமே கலந்துகொண்டவர்களாக இருந்தாலும் கூட இவர்களை விடுதலை செய்ய முடியாது. அவ்வாறு விடுவதென்றாலும் இவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியே விடுதலை செய்ய முடியும் என பிரதி அமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.
அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப் பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்தே மீண்டும் அவசர கால சட்டத்தைக் கொண்டுவர வேண்டியேற்பட்டுள்ளது.
இது தொடர்பாக முப்படையினரும் பொலிஸாரும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவசரகால சட்டம் முக்கியமானது. அவசரகால சட்டத்தில் பொலிஸார் மட்டுமல்ல முப்படைகளும் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்துள்ளது. இது ஆரோக்கியமான விடயமாகும்.
ஏனெனில் நாட்டின் நிலைமையில் பொலிஸாரால் மட்டுமே நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே அவசர கால சட்டத்தின் கீழ் இராணுவம் மற் றும் ஏனைய பாதுகாப்பு படைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு அவர்களுக் கும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பாரிய பொறுப்பைக் கொடுத்திருப்பது சிறந்த விடயம் என்றே கருதுகின்றோம்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து இதுவரையில் 2389 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 236 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 189 பேர் தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். 3 பேர் அவசர கால சட்டத்தின் கீழும் 186 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 263 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு 94 பேர் தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைதாகியவர்களில் 79 பேர் பிரதான சந்தேக நபர்களாவர்.

- குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பில் 29 பேரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பில் 29 பேரும் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் 29 பேரும் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.