Breaking News

அவசரகால சட்டத்தின் மூலம் வட கிழக்கில் இராணுவ ஆட்சியை நடத்த முயற்சி.!

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடுத்து அவ­ச­ர ­கால சட்­ட­டத்தை சாட்­டாக வைத்­து­க் கொண்டு வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ் வைத்­தி­ருக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது என தமிழ் தேசிய கூட்­ட­மைப் பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன் சபையில் தெரி­வித்துள்ளாா். 

வடக்கிலிருந்து உட­ன­டி­யாக இரா­ணு­வத்தை வெளி­யேற்ற வேண்டும் என வும் அவர் வலி­யு­றுத்­தினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று அவ­ச­ர­கால சட்­டத்தை நீ­டிப்­பது குறித்த விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்றுகையில் தெரிவித்துள்ளாா்.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பயங்­க­ர­வாத தாக்­குதல் இடம்பெற்றதன் பின்னர் அவ­ச­ர­கால சட்டம் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அவ­ச­ர­ கால சட்டத்­தினால் அதி­க­மாக தமிழ் மக்­களே பாதிக்கப்­பட்டு வரு­கின்­றனர். அவ­ச­ர­ கால சட்­டத்தை கொண்டு வடக்கு, கிழக்கில் அதி­க­மான இரா­ணுவ அடைக்­கு­மு­றைகள் கையா­ளப்­பட்டு வரு­கின்­றன.

இவர்­க­ளுக்கு வடக்கு, கிழக்கை கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்க வேண்டும் என்ற தேவை உள்­ள­மையே இதன்­மூ­ல­மாக தெரிகின்றது. இன்று நாட்டில் ஏனைய பகு­தி­ களில் நிலைமை ஒரு வகையில் இருக்­கையில் மத­வாச்­சியைத் தாண்­டி­ய­வுடன் வடக்கில் நிலைமைகள் படு மோச­மா­கவே உள்­ளன.

அங்கு இன்றும் இராணுவ ஆக்­கி­ர­மிப்­புகள் நில­வு­கின்­றன. வடக்கில் பாட­சா­லை­களில் இரா­ணுவம் குவிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் எமது மக்­களின் அன்­றாட வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. குண்டு வெடிப்பு இடம்­பெ­றாத பகு­தியில் இவ்­வாறு இரா­ணு­வத்தை குவித்து தேடுதல் நட­வ­டிக்­கைகள் நடத்­து­வதில் என்ன நியாயம் உள்­ளது?

இதன் மூல­மாக அர­சாங்கம் வடக்­கையும் கிழக்கையும் தமது கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­தி­ருக்க வேண்டும் என்ற நோக்­கத்தில் செயற்­பட்டு வரு­கின்­றமை தெளி­வாகத் தெரிகின்­றது. தமி­ழர்­களை அச்­சத்தில் வைத்­தி­ருக்­கவா இந்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்ற சந்­தேகம் எழு­கின்­றது.

முதலில் வடக்கிலிருந்து இரா­ணுவம் வெளி­யேற்­றப்­பட வேண்டும். இன்றும் இரண்டு இலட்­சத்து ஐம்­ப­தா­யிரம் இரா­ணு­வத்­தினர் வடக்கில் நிலை­கொண்­டுள்­ளனர். இவர்­களின் தேவை என்ன? இந்தக் குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வத்தைக் கார­ண­மாக வைத்­து­க்கொண்டு தமி­ழர்­க­ளையும் முஸ்­லிம்­க­ளையும் அடி­ப­ணிய வைக்கும் சிங்­களப் பேரி­ன­வாத அர­சி­யலைக் கையாள ஒரு சிலர் முயற்­சி­களை எடுக்­கின்­ற­னரா என்ற சந்­தேகம் எம்­மத்­தியில் உள்­ளது.

ஏனெனில் இன்று சிங்­களப் பிர­தே­சங்­களில் நிலை­மைகள் சுமு­க­மாக உள்­ளன. ஆனால் தமி­ழர்கள் வாழும் பகு­தி­களில் தொடர்ந்தும் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­புகள் இடம்­பெற்று வரு­கின்­றன. அவ­ச­ர­கால சட்டம் வடக்கு, கிழக்­கிற்கு ஒரு விதத்­திலும் தெற்­கிற்கு வேறு விதத்­திலும் செயற்­பட முடி­யாது.

ஆகவே இந்த அவ­ச­ர­ கால சட்­டத்தை நாம் எதிர்க்­கின்றோம். இன்று வாக்­கெ­டுப்­பிலும் நாம் இதனை எதிர்த்தே வாக்­க­ளிப்போம். ஏனெனில் அவ­ச­ர­கால சட்­டத்தை சாட்­டாக வைத்து வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியில் வைத்­துக்­கொள்­ளவே இந்த அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. நீரா­விப்­ பிள்­ளையார் அகற்­றப்­பட்டு இன்று ரஜ விகாரை அமைக்­கப்­ப­டு­கின்­றது.

பிள்­ளையார் கோவிலை பெற்­றுக்­கொ­டுக்க அத்து­ர­லியே ரத்ன தேரர் உண்­ணா­வி­ரதம் இருப்­பாரா? நயி­னா­தீவில் பாரிய பெளத்த விகாரை அமைக்­கப்­ப­டு­கின்­றது. நாவற்­குழி பிர­தேசம் முற்­று­மு­ழு­தாக தமி­ழர்கள் வாழும் பகுதி. அங்கு சிங்­கள விகா­ரைகள் ஏன் அமைக்­கப்­ப­டு­கின்­றன? தமிழ் இனத்தை முழு­மை­யாக சுத்­தி­க­ரிப்பு செய்து தமி­ழர்­களை அழிக்­கவே சிங்­களப் பேரி­ன­வாத சக்­திகள் அன்று தொடக்கம் இன்­று­வரை செயற்­பட்டு வரு­கின்­றன.

இவ்­வா­றான நிலையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக இணைந்து வாழக்கூடிய சூழல் ஒருபோதும் உருவாக்கப்படாது. தமிழர்கள் விடயத்தில் தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை காணாமல் போனோர் விவகாரம் அப்படியே உள்ளது. ஆகவே இந்த விடயங்களில் தீர்வுகள் வேண்டும். அதற் காக சர்வதேச நாடுகள் தலையிட்டு எமது விடயங்களில் கவனம் செலுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.