Breaking News

பாராளுமன்ற தெரிவுக்குழு சபாநாயகருக்கு கடிதம்.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக நிறைவேற்றுத்துறையின் செயற் பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறலை கண்டறிவதற்காகவே பாராளுமன்றத் தின் தீர்மானத்தின் பிரகாரம் விசேட தெரிவுக்குழு விசாரணைகளை முன் னெடுத்துள்ளது.

இவ்வாறான நிலையில் அத்தெரிவுக் குழுவின் செயற்பாடுகளை இடை நிறுத்த வேண்டும் என்று கோருவது ஜனநாயக மரபுகளை மறுதலிக்கும் செயலாகும் என்று குறிப்பிட்டு பாரா ளுமன்ற தெரிவுக்குழு சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை யிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலை மையில் ஒன்பது உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அமர்வுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சட்டமா அதிபர் குறித்த குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு கோரி சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

குறித்த கடிதம் சம்பந்தமான தெரிவுக்குழுவின் கருத்துக்களைப் பெறுவதற் காக சபாநாயகர் கரு ஜயசூரிய அக்கடிதத்தினை தெரிவுக்குழுவிடத்தில் கைய ளித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தெரிவுக்குழு உறுப்பினர்க ளின் கையொப்பத்துடன் ஏகமனதான தீர்மானத்தினை வெளிப்படுத்தும் வகை யில் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே மேற்படி கண்டவாறு தெரி விக்கப்பட்டுள்ளது.

மேற்படி கடிதம் சம்பந்தமாக பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற விசேட சட்டமா அதிபரின் கடிதத்தினை சபாநாயகர் கருஜய சூரிய தெரிவுக்குழுவிற்கு அனுப்பியிருந்தார். இந்நிலையில் அவ்விடயம் குறித்து தெரிவுக்குழவின் தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் அனை வரும் ஆராய்ந்து பதில் கடிதமொன்றை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள் ளோம். அக்கடிதத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது நிறை வேற்றுத்துறையின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தன.

அதன் பொறுப்புக்கூறல் என்ன என்பதற்காகவே தெரிவுக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சட்டவாக்கத்துறையின் தீர்மானத்திற்கு அமைவாக அமைக்கப்பட்ட பாராளு மன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை இடைநிறுத்துமாறு கூறப்படுகின் றது.

பாராளுமன்றத் தெரிவுக்குழு விடயத்தில் நிறைவேற்றுத்துறை தலையிட முடியாது. மேலும், குறித்த குண்டுத்தாக்குதல் சம்பந்தமாக பொலிஸ் தரப் பிற்கு நிறைவேற்று துறையால் வழங்கப்பட்ட அலோசனைகள், வழிகாட் டல்கள் தொடர்பாகவும் தெரிவுக்குழு கவனம் செலுத்துக்கின்றது.

அச்சமயத்தில் சட்ட மா அதிபரையும் தெரிவுக்குழுவில் முன்னிலையாகு மாறு அழைப்பதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்நிலையில் சட்ட மா அதிபர் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த விளைவது பொருத்தமான தல்ல.

வரலாற்றுக் காலம் முதல் நாட்டின் சட்டவாக்கத்துறைக்கும், நீதித்துறைக்கும் இடையில் சுமகமான நிலைமைகளே இருந்து வந்துள்ளன. இவ்வாறான நிலையில் சட்டவாக்கத்துறையின் செயற்பாடுகளில் நீதித்துறை தலையீடு களைச் செய்து குழப்ப வேண்டிய அவசியமில்லை.

தொடர்ந்தும் சுமகமான நிலைமைகளே பேணுவதில் அதீத கரிசனை கொள் கின்றோம். ஆகவே தெரிவுக்குழவின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன் னெடுப்பதற்கு இடமளிப்பதோடு, அடுத்த கட்டச் செயற்பாடுகளை தங்களின் வழிகாட்டுதல்களுடன் முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளோம் எனத் தெரி வித்துள்ளாா்.